அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியனவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், ஏனைய சகல அத்தியாவசிய பொருட்களும் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு இன்றைய தினம் கூடிய நிலையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. நிதியமைச்சில் குறித்த குழு முதல் முறையாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கூடியது. இதன்போது, எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஆடை மற்றும் உணவு பொருட்களை தட்டுப்பாடு […]
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 275 ரூபா 74 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபா 4 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]
77 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேறி முறிகள் இன்று ஏலம்!

77 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் இன்று ஏலம் விடப்படுகின்றது. இதன்போது, 91 நாட்களில் முதிர்ச்சியடையும் 37 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான முறிகளும், 182 நாட்களில் முதிர்ச்சியடையும் 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான முறிகளும் ஏலம் விடப்படவுள்ளன. இதுதவிர, 364 நாட்களில் முதிர்ச்சியடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளும் ஏலம் விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் […]
இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் உஸ்பெக்கிஸ்தான்

உஸ்பெக்கிஸ்தான் வானூர்தி சேவை முதன் முதலாக இலங்கைக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட வானூர்தி சேவை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படுத்தப்பட்ட வானூர்தி சேவை இன்று முதல் உஸ்பெக்கிஸ்தானுக்கும் மத்தள வானூர்தி நிலையத்திற்கும் இடையே இடம்பெறும். இதன் பின்னர் ஒவ்வொரு புதன் கிழமையிலும் இந்த சேவை நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வானூர்தியில் 200 பயணிகள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள வானூர்தி நிலையத்துடனான இந்த சேவைக்கு சலுகை அடிப்படையிலான கட்டணம் அறவிடப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]
மனித பாவனைக்கு உதவாத 40, 000 கிலோ உருளை கிழங்குகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள இரண்டு தனியார் களஞ்சியசாலைகளிலிருந்து, மனித பாவனைக்கு உதவாத 40, 000 கிலோகிராம் நிறையுடைய உருளை கிழங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தம்புள்ளை நகர முதல்வர் ஜாலிய ஓபாத தெரிவித்துள்ளார். தம்புள்ளை நகர முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த இரு களஞ்சியசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானிலிருந்து வர்த்தகர் ஒருவரால் இறக்குமதிசெய்யப்பட்ட குறித்த உருளை கிழங்குகளை, பெண்கள் இருவரை ஈடுபடுத்தி சுத்தம் செய்து, அவற்றை பழுதடையாத உருளை கிழங்குகளுடன் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. […]
இலங்கை மின்சார சபை மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த போதிலும், விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிப் பேன் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். அதேநேரம் மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றி பெற வேண்டும் எனவும், இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருளில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் […]
ஒரு முட்டையின் விலை 50 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம்

கால்நடைத் தீவன விலை உயர்வால் ஒரு முட்டையின் விலை 50 ரூபாவாக உயரும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் குறிப்பிடுகிறார். சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடை தீவன மூட்டை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நாட்டில் தினசரி நுகர்வு செய்யப்படும் 80 இலட்சம் முட்டைகளில் கிட்டத்தட்ட 65 இலட்சம் வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன் அந்த மாகாணத்தில் சுமார் 4 லட்சம் விவசாயிகள் […]