இலங்கையின் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிள்!

இலங்கை இளைஞர் ஒருவர் நாட்டில் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிளைத் தயாரித் துள்ளார். எரிபொருளின்றி இயங்கும் முச்சக்கரவண்டியை அசெம்பிள் செய்வதில் முன்னர் அறியப்பட்ட சசிரங்க டி சில்வா எனும் இளைஞனே இதைத் தயாரித்துள்ளார். மின்சார மோட்டார் சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்தால், மொத்தமாக 120 கி.மீ. தூரத்தைக் கடக்க முடியும் என்றும், மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் என்றும் அவர் கூறினார். மோட்டார் சைக்கிளின் உடல்(Body), சேஸிஸ் மற்றும் மின் கூறுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக அவர் […]
வங்குரோத்து நிலையை அடையும் இலங்கை.

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கை பெரும்பாலும் வங்குரோத்து நிலையை அடையும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை எதிர்வரும் ஜூன் மாதமாகும் போது ஒரு பில்லியன் டொலர் இறையாண்மை முறிகளை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]
8 நாட்களில் 25,000 சுற்றுலா பயணிகள் வருகை

இம்மாதத்தின் முதல் 8 நாட்களில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் 25,000 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டிற்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள இந்த காலப்பகுதியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளமை பாரிய முன்னேற்றம் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார். இந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அவர் கூறினார். ரஷ்யாவில் இருந்தே அதிகளவான […]
மத்தள விமான நிலையத்திற்கும் நேரடி விமான சேவை

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. குளிர்பருவ காலத்தில் இலங்கையை இலக்காகக் கொண்டு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் , வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி […]
நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 275 ரூபா 74 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபா 4 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]
கோதுமை மா பற்றாக்குறை குறித்து வெதுப்பக உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

கோதுமை மா நிறுவனங்களால் தமக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 35 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பிரதேசத்தில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் ஒரு மாத காலமாக பிரதான கோதுமை மா நிறுவனங்களால் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள கோதுமை மா முகவர்களுக்கு போதியளவு கோதுமை மா விநியோகிக்கப்படாததால், அவர்கள் தமக்கு குறிப்பிட்டளவான கோதுமை மாவினையே வழங்குவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பிரதான நிறுவனங்கள் தற்போது ஒரு கிலோ கோதுமை மாவினை 145 ரூபாவுக்கு […]
காதலுக்காக ஒரு செடி! காதலர் தின மரநடுகை

காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வகையில் இம்மாதம் 14ஆம் திகதி ‘காதலுக்காக ஒரு செடி’ என்ற தொனிப்பொருளின் கீழ், மர நடுகை திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளார். சுற்றாடல் அமைச்சு, பாதுக்க பசுமைப் பல்கலைக்கழகம், இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி மன்றம் ஆகியன இணைந்து இந்த மர நடுகை திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடத்தவுள்ளன. கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதே போன்ற மர நடுகை […]