டீசலுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர். இதன்போது, கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க முன்வந்திருந்ததாக குறிப்பிட்டார். எனினும், அந்த கடனை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் […]

1 லீற்றர் பெற்றோலுக்கு 16 ரூபாவும், டீசலுக்கு 50 ரூபாவும் நட்டம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது எரிபொருள் விற்பனையில் பாரிய இழப்பை சந்தித்து வருவதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 16 ரூபாவும், டீசலுக்கு 50 ரூபாவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனை இன்று மீண்டும் சமர்ப்பிக்கப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி […]

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் சுமார் 98,000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறவில்லை. இவர்களுள், கணிதப் பாடத்தில் சித்தியடையாத, ஆனால் […]

ஏற்றுமதிகளின் வருவாய் தொடர்ச்சியாக அதிகரிப்பு

ஏற்றுமதிகளின் வருவாயானது தொடர்ச்சியாக ஏழாவது தடவையாகவும் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது. வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் கடந்த டிசம்பரில் அதிகரித்தமைக்கு இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பதிவு செய்யப்பட்ட மாதாந்த இறக்குமதிச் செலவினம் முக்கிய காரணமாக அமைந்ததாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எட்டியுள்ளது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த […]

சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு நுகர்வோருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலி- உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அனைத்து சதொச விற்பனையகங்களிலும் குறித்த விலைக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த விலையில் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தாம் முழு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்வதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]

மழைவீழ்ச்சி 20 கிகாவோட் மின் உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது!

கடந்த இரண்டு நாட்களில் பதிவான மழைவீழ்ச்சி காரணமாக 20 கிகாவோட் மின் உற்பத்தியினை மேற்கொள்வதற்கு தேவையான நீர், கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அது மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருப்பதற்கு போதுமானது அல்லவென அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 20 கிகாவோட் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான நீர் கிடைக்கப்பெற்றுள்ளதால், மின்சாரத்திற்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு 47 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனை முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கை மின்சார சபையுடன் இன்றும், நாளையும் பேச்சுவார்தையை […]

இளைஞர்களை தவறாக வழிநடத்தும் விருந்துபசார நிலையங்கள்

இளைஞர்களை தவறாக வழிநடத்தவும், விஷ போதைப்பொருள் பாவனைக்காகவும் இன்று (14) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான விருந்துபசாரங்களை சுற்றிவளைக்குமாறு சகல காவல்நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை புலனாய்வு பிரிவினரின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். காதலர் தினம் என்பதால் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதற்கு சிலர் முயல்கின்றனர். எனவே, குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரம், தமது பிள்ளைகள் இன்றைய தினம் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு அவர் […]