கப்பலின் 78 வீத சிதைவுகள் அகற்றப்பட்டன

கடற்பரப்பில் விபத்துக்குள்ளான X-Press Pearl கப்பலின் 78 வீத சிதைவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமெரிக்க நிறுவனம் இது குறித்து அறிவித்துள்ளதாக சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய X-Press Pearl கப்பலை முற்றாக அகற்றுவதற்காக சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான 02 கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்துள்ளன. குறித்த இரண்டு கப்பல்கள் ஊடாக, X-Press Pearl கப்பலை அகற்றுவது […]
EPF, ETF தொடர்பில் நிதி அமைச்சர்

மிகைக் கட்டண வரி விதிக்கப்படவுள்ள நிறுவனங்களில் EPF, ETF உள்ளிட்ட மேலும் 09 நிதியங்கள் உள்ளடங்கவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமைச்சரவைக்கு தௌிவுபடுத்தியுள்ளார். நேற்றைய (14) அமைச்சரவை கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2020 மற்றும் 2021 மதிப்பீட்டு ஆண்டுகளில் 2,000 பில்லியனுக்கும் அதிகமான வரி அறவிடப்படக்கூடிய வருமானம் பெறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் ஒரே தடவையில் 25 வீத மிகைக் கட்டண வரியே விதிக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான 69 நபர்கள் […]
மாதாந்தம் சலுகை விலையில் கோதுமை மா!

தெரிவு செய்யப்பட்ட 115, 867 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவினை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் கடந்த மாதம் 18ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ‘பொதுமக்கள் முகம் கொடுத்துள்ள பொருளாதார சிரமங்களை […]
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிவிப்பதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார். எவ்வாறிருப்பினும் கடந்த வாரம் , இலங்கை அரசாங்கத்தினால் தற்போதுவரை நிதியுதவியை வழங்குமாறு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் […]
தரமான போக்குவரத்து ஜனாதிபதி பணிப்புரை

கடந்த ஆட்சிக் காலத்தில் இறக்குமதி செய்யப் பட்ட புகையிரதப் பெட்டிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை நிவர்த்தி செய்து அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சு மற்றும் வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள் மற்றும் ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் கார் கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கடந்த ஆட்சியில் 160 ஆசனங்களை உள்ளடக்கிய ரயில் பெட்டிகள் […]
குறைந்தளவு வருமானங்கள் பெறும் குடும்பங்களுக்கு விசேட இலத்திரனியல் அட்டை

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தை கருத்திற்கொண்டு சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும், வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட 40 குடும்பங்களுக்கு, 2,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலத்திரனியல் அட்டையொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோரினால் நடத்தி செல்லப்படும் சிறிய சிறப்பு அங்காடிகளில், குறித்த இலத்திரனியல் அட்டையின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெண் தொழில் முனைவோரினது சிறப்பு அங்காடி வலையமைப்பொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. […]
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 52.2 வீதமாக அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் ஓராண்டு காலத்திற்குள் 52.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 248.8 பில்லியன் ரூபாய்களாக இருந்த இலங்கையின் ஏற்றுமதி வருமானம் – ஒக்டோபர் 2020 முதல் ஒக்டோபர் 2021 வரையான ஒரு ஆண்டு காலத்திற்குள் – 52.2% அதிகரித்து, 332.9 பில்லியன்கள் ஆகியுள்ளது என சுங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]