16 கிலோ தங்கம் சுங்கப் பிரிவினரால் மீட்பு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து பொதிகள் சேவையின் மூலமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 16 கிலோ கிராம் தங்கத்தை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்கள் என டுபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பொதிகளில் சூட்சுமமாக தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 220 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத இறக்குமதி தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சுங்க போதைப் பொருள் பிரிவு […]
வெளிநாடுகளிலிருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள்!

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டசோதனையின்போது, போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொதிகள் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவை போலி முகவரிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. சோதனையின்போது, சந்தேகத்துக்கிடமான 5 பொதிகளை சோதனையிட்டபோது, அவற்றில் 472 கிராம் குஷ் எனப்படும் போதைப்பொருளும் , எக்டஸி […]
மத்தள விமான நிலையத்தை 722 விமானங்கள் பயன்படுத்தியுள்ளன

கடந்த வருடத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை 722 விமானங்கள் பயன்படுத்தியுள்ளதாக விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார். அவற்றில் 584 சேவைகள் சர்வதேச விமானங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, இலங்கையில் முன்னர் எப்போதும் சேவையினை மேற்கொள்ளாத 21 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்துடனான தமது சேவைகளை ஆரம்பித்துள்ளன. இந்தநிலையில், இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினில் 2,919 […]
அரிசி, தேங்காயை தொகையாக கொள்வனவு செய்ய முடியாது

சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலையங்களில் இவ்வாறான பொருட்கள் கணிசமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே மக்கள் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக தனிநபர் ஒருவர் ஒரே நேரத்தில் […]
தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நிதியமைச்சர் தலைமையில் குழு நியமனம்!

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கைப் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை வழங்கு வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் குழுவானது நிதியமைச்சரின் தலைமை யில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தகம், விவசாயம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, கூட்டுறவு சேவைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி, பல்வகை மீன்பிடி, மீன் ஏற்றுமதி மற்றும் கால்நடைகள், பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பாற்பண்ணை ஆகியவற்றின் […]
கழிவுத் தேயிலை பறிமுதல்

அனுமதிப்பத்திரம் இன்றி லொறியில் 1500 கிலோ கழிவுத் தேயிலையை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொகவந்தலாவ பிரதேசத்தில் வைத்து நேற்று 14ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதி யிலுள்ள பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து 1500 கிலோ கழிவுத தேயிலையை ஏற்றிச் சென்ற போது, பொகவந்தலாவ, சப்பல்டன் தோட்டப் பகுதியில், கழிவுத் தேயிலை லொறி கைப்பற்றப் பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் […]
டொலரைப் பெற விரைவில் இந்தியாவுக்கு விஜயம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள தாக வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடான இந்தியா உதவுமா என்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், “இன்று இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியா மிகவும் சாதகமான பங்களிப்பை செய்துள்ளது. நாங்கள் இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் டொலரைப் பெற உள்ளோம். இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கிடையிலான நெருங்கிய உறவுகளின் அடிப்படையில், பாரிய முதலீடுகள் போன்ற பல நன்மைகளை […]