இந்தியா, இலங்கைக்கு இடம்பெயரும் பூச்சிகள்

இந்தியாவின் – இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ‘கிரிம்சன் ரோஸ்’ (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகையான வண்ணத்துப்பூச்சிகள் காலநிலை மாற்றம் மற்றும் உணவு தேவைக்காக வடகிழக்குப் பருவ பெயர்ச்சி மழைக்கு முன்னர், மலைப்பகுதிகள் நோக்கி இடம்பெயரும் ஆற்றல் கொண்டுள்ளதாக, த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் இயல்புடைய குறித்த வகை வண்ணத்துப்பூச்சிகள் நேற்றுமுன்தினம் முதல் இவ்வாறு இடம்பெயர்வது அவதானிக்கப்பட்டுள்ளது. கடல் வழியாக இலங்கை […]

உள்நாட்டு அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி

அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு அரிசியின் விற்பனை மற்றும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், நுகர்வோர் இறக்குமதி அரிசியினை கொள்வனவு செய்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்தார். இதனால் உள்நாட்டு அரிசியின் விற்பனை 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் முன்னதாக விற்பனை செய்யப்பட்ட விலையை காட்டிலும் தற்போது குறைவடைந்துள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் பீ.கே ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். அன்றைய தினத்தில் 4 ஆயிரத்து 677 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு நாள் ஒன்றில் அதிகளவான சுற்றுலா பயணிகளின் வருகை, டிசம்பர் மாதம் 25ஆம் திகதி பதிவானது. குறித்த தினத்தில் 4 ஆயிரத்து 829 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்ததாக […]

யாழில் வெளிநாடு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நாட்களில் இடம்பெற்று வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

அத்தியாவசியத்துக்கு எரிபொருளை வழங்கத் தீர்மானம்

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தயாராகி வருகிறது. மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள், முப்படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது கூட்டுத்தாபனத்தின் நாளாந்த இழப்பு ரூபா 365 கோடிக்கும் அதிகமாகும். எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான […]

பெற்றோல், டீசலின் உத்தேச புதிய விலைகள் இதோ

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனையை சமர்ப்பித் துள்ளது. பெற்றோல் மற்றும் டீசல் விற்பனையில் ஏற்பட் டுள்ள நட்டத்தை ஈடுகட்ட விலை அதிகரிப்பு அவசியமானது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது சிபெட்கோ ஒரு லீற்றர் பெற்றோலை ரூ.177க்கு விற்பனை செய்வதால், அதை ரூ.192 ஆக உயர்த்த வேண்டும் எனவும் தற்போது ஒரு லீற்றர் டீசலை 121 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதால், அதை […]

வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து […]