யாழில் இரவு நேர வழிப்பறிக் கொள்ளைகள்…..

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிடுகின்றனர். பொலிஸாருக்கு தகவல் வழங்கும் போதும் சம்பவ இடங்களுக்கு வருகை தர பொலிஸார் மறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீது கோப்பாய் சமிக்கை விளக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. கோப்பாய் […]

அதிகளவில் மின்சாரம் பாவிப்போர் ஜெனரேட்டர்களை பயன்படுத்துங்கள்

பாரியளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் அல்லது பாவனையாளர்கள், அவர்களிடமுள்ள மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு இடமளித்துவிட்டு, தேசிய மின் கட்டமைப்பின் மூலம் வழங்கப்படும் மின் விநியோகத்தை இடைநிறுத்துமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் போது ஒரு அலகுக்கு 36 ரூபாவை வழங்க தயார் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். மூன்று மாத மின்வெட்டுக்கான அனுமதியை மின்சார சபை கோரியிருந்ததுடன், அந்த அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு […]

போதுமான எரிபொருள் கையிருப்பு!

போதுமானளவு எரிபொருள் கையிருப்பிலுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியதில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்றும் (16) சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]

இலங்கையில் திராட்சை செய்கை பாதிப்பு

உரமின்மை காரணமாக தமது விளைச்சல் குறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட திராட்சை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் இளவாலை, வலிகாமம் வடக்கு, புன்னாலைக்கட்டுவான் மற்றும் உரும்பிராய் உள்ளிட்ட பிரதேசங்களில் சுமார் 140 ஏக்கர் நிலப்பரப்பில் திராட்டை பயிரிடப்பட்டுள்ளது. எனினும் உரமின்மை, இரசாயன கிருமிநாசினி தட்டுப்பாடு என்பனவற்றால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லையென செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக செய்கையாளர்கள் கூறியுள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி […]

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 0.6 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2022 சனவரியில் 58.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் தொழில்நிலையில் மீட்சியுடன் ஒன்றிணைந்து புதிய கட்டளைகள், உற்பத்தி என்பவற்றில் பதிவாகிய மேம்பாடுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் கொள்வனவுகளின் இருப்பு அதிகரித்த அதேவேளை நிரம்பலர்களின் விநியோக நேரம் நீட்சியடைந்தது. பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 57.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2022 இன் தொடக்கத்தில் பணிகள் துறையில் […]

இலங்கை முறிகளின் ஊடாக திரட்டப்பட்ட நிதியங்கள்

இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தும் விதத்தில் 2022 சனவரி 01 தொடக்கம் 2022 பெப்புருவரி 15 வரை இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் வாயிலாக ஐ.அ.டொலர் 111.5 மில்லியன் கொண்ட தொகையுடைய நிதியங்கள் திரட்டப்பட்டுள்ளன. மேற்குறித்த காலப்பகுதியின் போது இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள், மூன்று மாதங்களிலிருந்து ஐந்து வருடங்களைக் கொண்ட வீச்சுடைய முதிர்ச்சிப் பரம்பலில் காணப்பட்டு, பாரியளவிலான […]

இலங்கைவந்த 50,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

இம்மாதத்தின் 15 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ அண்மித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதன் காரணமாக நெரிசலை தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதரும் போது முதலில் கவரப்படும் இடம் […]