நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு விலை அதிகரிப்பு!

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர். இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். எனினும், ஒரு கிலோகிராம் நாடு அரிசி […]

வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த சட்டவிரோத மதுபான போத்தல்கள்

சட்ட சுமார் ரூ.1 கோடி பெறுமதியான மதுபான போத்தல்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நுவரெலியா, லிதுல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயது வர்த்தகரான இவர் வெளிநாடுகளுக்குச் சென்று விமானம் மூலம் பல்வேறு பொருட்களை இந்நாட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (16) காலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-226) மூலம் […]

சொகுசு வாகனங்கள் – சட்டவிரோத இறக்குமதி: உடனடியாக கைது 

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கை சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்வது மாத்திரமின்றி சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் […]

ஒரு மணி நேரத்தில் கடவுச்சீட்டு…

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி நிலைமை நீடித்து வரும் நிலையில், ஒரு மணி நேரத்தில் அதனை பெற்றுக்கொண்ட அரச அதிகாரியினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் வியானி குணதிலக்க நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வந்து ஒரு மணித்தியாலத்தில் தனது புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார். அவர் காலை 10.15 மணிக்கு வந்ததாகவும், 11.30 மணியளவில் அவர் தனது இராஜதந்திர சிறப்புரிமையை ரத்து செய்துவிட்டு சாதாரண கடவுச்சீட்டை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய கோடீஸ்வரர்!

துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் ( 26). இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்இருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவருக்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி உள்ளார். இந்நிலையில் தனது மனைவி நீச்சல் உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக ஜமால் அல்நடக் ஒரு தீவையே […]

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியலில்..

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது வழக்கானது இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்காமை, பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை, பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு […]

விபத்தில் இளம் கணவன், மனைவி உயிரிழப்பு.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குரஸ்ஸ சியம்பலாகொட – பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவருடன் சென்ற ஆசிரியை பிடபெத்தரை, மெதிரிபிட்டிய பாடசாலையில் கிடைத்த பரிசில்களுடன் மோட்டார் சைக்கிளில் மகதுரையில் உள்ள தமது வீட்டை நோக்கி கணவருடன் […]