இலங்கையில் பேக்கரிகள் மூடப்படும் நிலை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் நாட்டிலுள்ள பேக்கரி உரிமையாளர்கள் தொழிலைக் கைவிடும் நிலையில் உள்ளனர். இரத்தினபுரி, கஹவத்தை, கொடகவெல, பல்லேபெத்த மற்றும் இறக்குவானை ஆகிய பிரதேசங்களிலுள்ள சிறிய அளவிலான பேக்கரிகள் தொழில்துறையைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அதன் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன. கோதுமை மா போன்ற பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பண்டங்களின் தரம் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பின்னணியில், நாட்டில் நடமாடும் பேக்கரி தயாரிப்பு விற்பனையாளர்களும் […]
இலங்கை உற்பத்தி மற்றும் உணவு சந்தை

கத்தார் நாட்டில் வசிக்கும் கத்தார் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில் நாட்டின் நற்பெயரை அதிகரிக்கும் நோக்கில், தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம், லுலு குழுமத்துடன் இணைந்து, ‘இலங்கையின் சுவை’, ‘இலங்கை கைத்தறி மற்றும் பட்டிக் சேலை விழா’ என்ற தலைப்பில் பன்முக இலங்கை ஊக்குவிப்பு நிகழ்வை ஆரம்பித்தது. இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோஹாவில் உள்ள டி-ரிங் ரோட்டில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில், லுலு குழுமத்தின் பணிப்பாளர் கலாநிதி. […]
குறைந்த செலவில் நெல் அறுவடைத் திட்டம்

இலங்கை விமானப்படை, குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் அறுவடைச் செலவைக் குறைக்கும் நெல் அறுவடைத் திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது. மொறவெவ விமானப்படை நிலைய கட்டளை அதிகாரி குரூப் கப்டன் லலித் சுகததாசவின் மேற்பார்வையின் கீழ் நெல் அறுவடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் ஊடாக மொறவெவ பிரதேச செயலகம் மற்றும் பிராந்திய நெல் விவசாய சங்கங்களின் பரிந்துரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 31 விவசாய குடும்பங்கள் பயனடையவுள்ளன. இதற்கமைய முதற்கட்டமாக […]
கட்டுநாயக்கவில் இருந்து ரெயில் சேவை

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரெயில் சேவைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக ,கட்டுநாயக்க – நீர்கொழும்பு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கான ரெயிலை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது. இதன் மூலம் கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் பயணிகளுக்கு தற்போது 40 நிமிடங்களுக்குள் சென்றடைவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. […]
மாதாந்தம் 2 இலட்சம் பயணிகளை எதிர்பார்க்கும் சுற்றுலாத்துறை

இலங்கைக்கு மாதாந்தம் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். எனினும் தற்போது சுற்றுலா குழுவாக இலங்கைவர ஆரம்பித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50,326 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்துள்ளனர். இதன்படி இந்த ஆண்டு 132, 653 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]
இலங்கை சீனியில் இரசாயன கலப்படம்.

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனி பக்கற்றில் ஒரு வகையான இரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமகனொருவர் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலும் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகனொருவர், அவ் வர்த்தக நிலையத்தினால் பொதியிடப்பட்ட சீனி பக்கற்றினை கொள்வனவு செய்துள்ளார். வீட்டிற்கு சீனியினை எடுத்துச்சென்று அதனை பாவனைக்கு உட்படுத்திய […]
25 சுற்றுலா கிராமங்களை உருவாக்க தீர்மானம்

நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 25 சுற்றுலா கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்காகவும் 10 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்திற்குள் குறைந்தபட்சம் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் […]