இலங்கையின் பொருளாதாரம் மோசமடையும் – ரணில்

நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து எதிர்வரும் வாரம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை மீது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அதனை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அவர் விசேட காணொளியை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. டொலர் மற்றும் ரூபா நெருக்கடிகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை. […]
சிரமங்களை எதிர்நோக்கியுள்ள அச்சுத் தொழில்துறை

மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக இலங்கையின் அச்சுத் தொழில்துறையானது செயற்பாடுகளைத் தொடர்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. இந் நிலையில் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான காகிதங்களை இறக்குமதி செய்ய அமெரிக்க டொலர்கள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் காகிதத்தின் விலை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளதாக புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு ஒவ்வொரு மாதமும் இறக்குமதி செய்யப்படும் 120,000 தொன் காகிதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் காகிதத்தின் வீதம் தற்போது படிப்படியாக குறைந்து […]
யாழில் ஆசைப்பட்டு 250000 ரூபாவை இழந்த இருவர்

யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி பணத்தை பறி கொடுத்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து […]
நிர்ணய விலையில் மஞ்சள் கிழங்கு

நாடு முழுவதுமுள்ள மஞ்சள் செய்கையாளர்களிடமிருந்து நிர்ணய விலையில் மஞ்சள் கிழங்கு கொள்முதல் செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாய திணைக்களம் மற்றும் இலங்கை வாசனைத் திரவியங்கள் சந்தைப்படுத்தல் சபை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட செய்கையாளர்களிடமிருந்து ஒரு இலட்சம் கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மஞ்சள் கிழங்கு 165 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாக […]
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 276 ரூபா 92 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 235 ரூபா 26 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]
மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு!

உள்நாட்டு சந்தையில் பால்மா தட்டுப்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று காலை 6:00 மணி முதல் நுகேகொட மிரிஹானவிலுள்ள உள்ளூர் பால்மா விற்பனை நிலையத்துக்கு எதிரே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று பால்மா கொள்வனவு செய்ததைக் காண முடிந்தது. நுகர்வோரின் கூற்றுப்படி, கடந்த நாட்களில் பால்மா வழங்குவதற்கான நடைமுறை பின்பற்றப்பட்ட போதிலும், விற்பனை நிலை யத்தில், பால்மா கொள்வனவு செய்வதற்கு டோக்கன் வழங்கப்படவில்லை. உள்ளூர் பால்மா கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை தவிர்க்கும் வகையில் பொலிஸாரால் டோக்கன் […]
முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் மத்திய வங்கி

தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வருடம் இதுவரையில், இலங்கை அபிவிருத்தி பத்திர வெளியீடுகள் சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களை ஈர்த்து 111.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]