நாடளாவிய ரீதியில் 4 கட்டங்களாக மின்சாரத் தடை

இலங்கை மின்சார சபைக்கு மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் தினசரி பிற்பகல் 02.30 தொடக்கம் 06.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், மாலை 06.30 மணிமுதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. UPDATE இன்று பிற்பகல் 2.30 முதல் மாலை 6.30 வரையும் நாடளாவிய ரீதியில் நான்கு கட்டங்களாக ஒரு […]
வெளிநாடு செல்வோருக்கு மாத்திரம் 4ம் தடுப்பூசி

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு தேவையேற்படின் செயலூக்கி தடுப்பூசிக்கு மேலதிகமாக, நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும். எவ்வாறிருப்பினும் நாட்டிலுள்ள அனைவருக்கும் நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். சில நாடுகளில் நான்காம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள வைத்திய நிபுணத்துவ தரவுகளுக்கமையவும், உலக […]
சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் கிடையாது

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். நெருக்கடியான நிலைமையை சீர்செய்ய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மாற்று வழிமுறைமை ஊடாக தற்போதைய நிலைமையினை சமாளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் […]
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் கட்டணம் 6500

வெளிநாட்டுப் பயணத்துக்கான பி. சி. ஆர். பரி சோதனைக்கான கட்டணமாக இன்று வெள்ளிக் கிழமை முதல் சகலரிடமும் 6 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் மத்திய சுகாதார அமைச்சின் அறிவு றுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பி. சி. ஆர். பரிசோ தனைக்கான கட்டணமாக சகலரிடமும் ரூபா 6,500 அறவிடப்படும். வெள்ளிக்கிழமை முதல் பணத்தைச் செலுத்தி […]
தனியாரிடமிருந்து 50 மெகா வோட் மின்சார கொள்வனவு

மின்சார அலகுகளின் பாவனையைக் குறைப்பதற்காக 50 மெகாவோட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் தனியார் துறை ஊடாக மேலும் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு அறிவிக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். […]
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!

இன்று நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. பத்தேகமவிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று காலை 8 மணியளவில் வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பும் பணியை ஆரம்பித்ததுடன், அது திறக்கப் படுவதற்கு முன்னரே நீண்ட வரிசை காணப் பட்டது. இதற்கிடையில், காலி, தெவட்டா பகுதியிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் முதல் எரிபொருள் தீர்ந்து விட்டது. காலிப் பகுதியிலுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் […]
பாணின் விலை ரூ. 300 – 400 வரை செல்லும் நிலை

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுவதாகவும் அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இன்று ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை முந்நூறு, நானூறு […]