பெற்றோலுடன் கப்பலொன்று இன்று இலங்கை வருகிறது

37,000 மெற்றிடக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளதாக, வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், நாளைய தினம் 37, 500 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளது. இந்தக் கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் தடையின்றி இடம்பெறுவதாகவும் அந்த அமைச்சு […]
பொருளாதார கொள்கை. பிரதமர் கண்காணிப்பு விஜயம்

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சகத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு இன்று(18) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த அமைச்சகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் அங்குச் சென்ற பிரதமர், அதன் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த அமைச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் ஆராய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் […]
நெல் கொள்வனவு இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

நிக்கவரெட்டிய பகுதியில், இரண்டு களஞ்சியங்களுக்காக, நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல்லைக் கொள்வனவு செய்தமை தொடர்பில், இரண்டு அதிகாரிகள், பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்னர். வடமேல் கமநல சேவை அமைப்பின் பிரதிநிதிகள், இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறியப்படுத்தியதை அடுத்து, உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய, கணக்காய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குறித்த களஞ்சியங்களில் சுமார் 15 இலட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 3 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகளவான நெல், விலங்கு உணவுக்காக பயன்படுத்துவது என்பது கண்டறியப்பட்டுள்ளது. […]
இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு, 1,888 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மேலும், இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைவடைந்துள்ளது. ஒரு பவன் 24 கரட் தங்கத்தின் விலை – 108,050 LKR ஒரு பவன் 22 கரட் தங்கத்தின் விலை – 99,100 LKR ஒரு பவன் 21 கரட் தங்கத்தின் விலை- 94,600 LKR ஆக இலங்கையில் இன்று […]
சரக்குக் கப்பலில் தீ சொகுசுக் கார்கள் எரிந்து நாசம்

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போர்த்துக்கல் கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டு ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் சிக்கிய கார்களின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். ஃபெலிசிட்டி […]
செயற்கையாக பழங்கள் குறித்து விசேட குழு

இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை, சுகாதார அமைச்சின், உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது. இரசாயன திரவியங்களைப் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றமை குறித்து தொடர்ச்சியாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹிரு சி.ஐ.ஏவினால், அது தொடர்பில் அண்மையில் வெளிப்படுத்தப்பட்டது. இரசாயன திரவியங்களைப் பயன்படுத்தி, மெனிங் சந்தையில் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல் இதன்போது வெளியிடப்பட்டது. இது குறித்து, […]
கனடாவில் வரலாறு காணாத அளவில் பணவீக்கம்!

கனடாவில் வரலாறு காணாத அளவில் பணவீக்கம் பதிவாகியுள்ளது. நாட்டில் வருடாந்த பணவீக்க வீதம் ஐந்து வீதமாக உயர்வடைந்துள்ள நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் முதல் தடவையாக இவ்வாறு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 4.8 வீதமாக காணப்பட்டது. இந்த ஆண்டில் அது 5.2 வீதமாக உயர்வடைந்துள்ளது. வீடுகள், எரிபொருட்கள் மற்றும் மளிகை பொருட்களது விலைகளின் அதிகரிப்பே இவ்வாறு பணவீக்கம் ஏற்படக் […]