அரச நிறுவனங்களுக்கான விசேட சுற்றுநிருபம்

அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இதன்போது, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகன பாவனை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
நீர்மட்டம் வெகுவாக குறைவடைகிறது!

கடந்த தினங்களில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இதற்கமைய காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 24.3 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அதன் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 47 சதவீதம் வரையும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 49.1 சதவீதம் வரையுமே தற்போது நீர் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
கோதுமை மா வழங்கும் திட்டம் ஆரம்பம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபா விலையில் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. இதற்கு கடந்த வாரம் அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்திருந்தது. அதற்கமைய, நுவரெலியா – வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் இந்நிகழ்வு இன்று வைபவ ரீதியாக இடம்பெற்றது. இதில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 71 குடும்பங்களுக்கு கோதுமை மா வழங்கி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற […]
ரூபா இருப்பிற்கும் நெருக்கடி

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவிற்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்பிற்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் கொள்வனவிற்கான ரூபாவை திரட்டிக்கொள்வதில் பாதிப்பு ஏற்படும். எரிபொருள் விநியோகத்தில் பாரிய நட்டத்தை கூட்டுத்தாபனம் எதிர்ககொள்கிறது. எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பலமுறை கோரிக்கையை முன்வைத்துள்ளது. தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் இறக்குமதிக்கான […]
286 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி

கடந்த வருடம் சுமார் 286 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20.45 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பாகுமென சங்கம் கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 265.57 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் […]
முட்டையின் விலை குறைவடைந்தது.

முட்டையின் விலை குறைவடைந்துள்ளமையினால் தங்களது தொழிற்துறை பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக குருநாகல் மாவட்ட முட்டை உற்பத்தி தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலை தொடருமாயின் எதிர்வரும் காலத்தில் முட்டை தொழிற்துறையில் இருந்து விலக நேரிடும் என அவர்கள் கவலை வெளியிடுகின்றனர். கடந்த பண்டிகை காலத்தில் முட்டை ஒன்றின் விலை 28 முதல் 32 ரூபா வரை காணப்பட்டது. தற்போது முட்டை ஒன்றின் விலை 12 ரூபா முதல் 16 ரூபா வரை குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் தற்போது கோழிக்கான உணவின் […]
டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

டொலர் பற்றாக்குறை காரணமாக, எதிர்வரும் மே மாதத்தின் பின்னர், அதிசொகுசு வாகனங்களுக்கான டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என டயர் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் தற்போது இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில், 83 இலட்சத்து 31 ஆயிரம் வாகனங்கள் உள்ள நிலையில், ஒட்டுமொத்த டயர் தேவை, 31 இலட்சத்து 18 ஆயிரத்து 500 ஆக உள்ளது. அவற்றில் 18 இலட்சத்து 55 ஆயிரம் டயர்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 12 இலட்சத்து 63 ஆயிரத்து […]