பிரித்தானியா வந்த கழிவு கொள்கலன் மீள் ஏற்றுமதி

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவு கொள்கலன்களின் இறுதி தொகுதி இன்று மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. சுங்கப்பிரிவின் பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளர் சுதத்த சில்வா இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்படி, 45 கழிவு கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தின் சீ.ஐ.சீ.டி முனையத்திலிருந்து கப்பலில் ஏற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மருத்துவ இரசாயன கழிவுகள் உள்ளிட்ட 242 கொள்கலன்கள் 2019ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த கொள்கலன்கள் […]
இலங்கை விலை அதிகரிப்பு உணவு பழக்கத்தில் மாற்றம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்களின் உணவுப் பழக்கத்தில் குறுகிய கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஊட்டச் சத்து குறைபாடு அல்லது போசாக்கின்மை நிலைமைகள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என வயம்ப பல்கலைக்கழகத்தின் போஷாக்கு தொடர்பான பேராசிரியை ரேணுகா சில்வா தெரிவித்துள்ளார். மரக்கறி விலை அதிகரிப்பு காரணமாக அதற்கு பதிலாக மக்கள் மாற்று வழிகளை நாடுகின்ற போதிலும், அரிசியினது விலை அதிகரித்திருந்தாலும் அதன் நுகர்வு குறையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் […]
அரச வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான வீதம் திருப்பிச் செலுத்தப்படாமை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன அரச வங்கிகளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார். பெற்றோலியக் […]
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களால் உயர்வடைந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவின் டப்ளியுவ்.டி. ஐ ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் இலங்கைக்கு

டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சுஜித் விஜேசிங்க தெரிவிக்கையில், தலா ஒவ்வொரு கப்பலிலும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்காலத்தில் நீக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நிதி செலுத்தும் அடிப்படையில், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை […]
மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதி மாற்றம்

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுழற்சி முறையில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும். இதற்கான அறிவுறுத்தல் இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயர் தரப்பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு! இன்றைய தினத்தில் நாடளாவிய ரீதியில் […]
இலங்கை சுற்றுலாவுக்காக புதிய செயலி!

நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி ஒன்று இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் குறித்த செயலி விசிட் ஸ்ரீலங்கா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலியின் ஊடாக சுற்றுலா தலங்களுக்கான கட்டண சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும். உள்நாட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக குறித்த செயலி தயாரிக்கப்படுகின்றது. நாட்டில் உள்ள உணவகங்களின் கட்டண விபரங்கள், தங்குமிட வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன. வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தியும் […]