இலங்கை பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!

நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவாி மாதத்தில் 2.8 சதவீதத்தினால் அதிகாித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கமானது 14 சதவீதமாக காணப்பட்டது. இந்நிலையில், 2022 ஜனவரி அது 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி […]
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கடந்த காலங்களில் பல தடவைகள் கோரி இருக்கிறது. தற்போதும் அந்தவிடயத்தில் அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்து உதவி வழங்கும் நிறுவனங்களுடனும் அரசாங்கம் தொடர்பில் இருக்கிறது என்று அவர் கூறினார். […]
நாளையும் சுழற்சி முறையில் மின்வெட்டு!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் நாளைய தினமும் சுழற்சி முறை மின்துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை இன்று பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கமைய, A, B, C ஆகிய குழுக்களில் உள்ளடங்கும் பிரதேசங்களுக்கு மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய குழுக்களில் உள்ளடங்கும் பிரதேசங்களுக்கு சுழற்சி […]
உண்டியல்முறை இலங்கைக்குள் குவியும் டொலர்கள்!

உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் […]
இலங்கை – நெதர்லாந்துக்கு இடையிலான வர்த்தக உறவு

இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், இலங்கையின் ஐரோப்பிய வர்த்தக சம்மேளனம் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக ஏற்கனவே இரண்டு இணையத்தளங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தகவல்களை பெறுல், மற்றும் வர்த்தக பங்காளிகளை நெதர்லாந்தில் இருந்து தெரிவு செய்தல் என்ற தொணிப்பொருளில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொலைக்காணொளி தொழிநுட்பம் மூலம் […]
வர்த்தக நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடி

பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடியினை எதிர்நோக்குவதாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது. பண புழக்கங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால், இந்த நிறுவனங்களினால், ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றிற்கான கொடுப்பனவுகளை வைப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பல தொழில் வழங்குனர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்தவோ அல்லது […]
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

நிதியமைச்சினால் எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவையேற்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஹங்வெல்ல பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்நிய செலாவணி பிரச்சினையினால் நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக எரிபொருள் கொள்வனவின் போது, அரசாங்கத்தினால் வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும். அதிக விலைக்கு கொள்வனவு செய்து, குறைந்த விலையிலேயே நாட்டில் எரிபொருளை விநியோகித்து வருகின்றோம். இதனால், […]