நிதியமைச்சர் இந்தியாவுக்கு விஜயம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (25) இந்த விஜயத்தை இருவரும் மேற்கொள்ளவுள்ளனர். நிதியமைச்சர் இதற்கு முன்னரும் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி, இந்தியாவிடமிருந்து நாட்டுக்கு பெற்றுக் கொள்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அண்மையில் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் […]
37500 மெட்ரிக் டன் டீசல் விடுவிக்கப்பட்டது

டொலர் பற்றாக்குறை காரணமாக விடுவிக்க முடியாமல் இருந்த 37, 500 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய சிங்கப்பூர் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த கப்பலின் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நேற்றிரவு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய தினம் குறித்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ர் ஒல்கா தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் இரண்டு நாட்களில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டை […]
200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில்

பழுதடைந்த 200 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு இன்று (22) முற்பகல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பேருந்து இறக்குமதியும் தற்காலி கமாக நிறுத்தப்பட்டதுடன், பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வாக, பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக 2020 டிசம்பரில் […]
டீசல் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் பாதிப்பு

டீசல் தட்டுப்பாடு ரயில் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாது என ரயில்வேயின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே திணைக்களத்திடம் போதிய டீசல் கையிருப்பு உள்ளது என்றும் திணைக்களம் எதிர்காலத்துக்கென பாரிய எரிபொருள் இருப்பு வைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! […]
இலங்கை வங்கியி வெளியிட்டுள்ள நாணய மாற்று.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 36 சதம். விற்பனை பெறுமதி 276 ரூபா 83 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 18 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 73 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி […]
கொழும்பு பங்குச் சந்தை நிலைவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் சரிவுத் தன்மையில் நிறைவடைந்தன. இன்றைய நாளில் கொழும்பு பங்குச் சந்தையின் எஸ்.எண்ட். பி. எஸ்.எல் 20 விலைச் சுட்டெண் 5.2 சதவீதம் சரிவை சந்தித்தது. இதனால் பிற்பகல் 1.44 அளவில் 30 நிமிடங்களுக்கு சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் 2.14 அளவில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய வர்த்தக நாள் நிறைவின் போது, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 542.67 புள்ளிகள் சரிவடைந்து 11, 591.37ஆக பதிவானது. S & P […]
4 மணித்தியாலத்துக்கு அதிக காலம் மின்துண்டிப்பு!

சுழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார். இதன்படி, தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் […]