யாழ் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசல் இல்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ‘டீசல் இல்லை’ என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி மருதனார்மடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறான பதாகை வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான மக்கள் எரிபொருள் கொள்வனவுக்காக காத்திருப்பதாகவும் அறிய வருகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி […]

3 மாதத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளன

இலங்கை சுங்கத்திணைக்களத்திடம் உள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இலங்கையில் மூன்று மாதத்திற்கு போதுமான அத்தியாவசியப்பொருட்கள் உள்ளன என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்;டமொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பலஇடங்களிற்கு விநியோகிக்கப்பட்ட பொருட்கள் குறித்த தரவுகள் இல்லை என தெரிவித்துள்ள அவர்சுங்கத்திணைக்களம் மற்றும் மொத்தவியாபாரிகளின் தரவுகளின் அடிப்படையில் மூன்று மாதத்திற்கு போதுமான அத்தியவாசியபொருட்கள் சந்தையில் உள்ளன […]

நாட்டின் பல பகுதிகளில் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு

சில பெற்றோல் நிரப்பு நிலையங்களில் தீர்ந்து விட்டதாக விளம்பரங்களும் காட்டப்படுகின்றன. பெற்றோலைப் பெற நீண்ட வரிசைகளும் காணப்படுகின்றன. எனினும், கடந்த சனிக்கிழமை வந்த கப்பலில் எரிபொருள் இருப்பு இருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது. தற்போது சிங்கப்பூரிலிருந்து டீசல் ஏற்றிவந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் சேமிப்பு முனையத்தில் டீசல் தீர்ந்து விட்டது.எனினும், அதற்கான கொடுப்பனவுகள் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதால், டீசல் இறக்கும் பணி ஆரம்பிக்கப் […]

விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு

உரப் பிரச்சினை காரணமாக குறைந்த அளவிலான அறுவடையைப் பெற்ற விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கமைய அவர்களுகான நட்டஈட்டுத் தொகையை கட்டாயமாக வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் […]

கொழும்பில் 70 மில்லியன் டொலர் ஆடம்பர ஹோட்டல்

இலங்கையின் முன்னணி வர்த்தக குழுமமான தம்ரோ நிறுவனம், கொழும்பில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆடம்பர சொகுசு ஹோட்டலினை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதுடன், இதற்காக அரசாங்கத்திடமிருந்து வரி சலுகைகளை எதிர்பார்த்துள்ளதாகவும், தெரிவித்துள்ளது. இந்த ஹோட்டல் கொழும்பு 03 இல் 652 அறைகளுடன், நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக 2008 ஆம் ஆண்டு மூலோபாய அபிவிருத்தி திட்ட சட்டத்தின் கீழ் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி […]

கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனை நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்தனை நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டன. பங்குச் சந்தையின் எஸ்.எண்ட்.பி சிறிலங்கா 20 சுட்டெண் 5 சதவீத வீழ்ச்சியை அடைந்த நிலையில், 11.17 அளவில் பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்போது பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீள ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]

வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த மாதம் 21ஆம் திகதி வரையில் 150,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். சுற்றுலா அமைச்சின் தரவுகளுக்கு அமைய குறித்த காலப்பகுதியில் 155,375 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் அதிகமானோர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 22 நாட்களில் சராசரியாக நாளாந்தம் 3,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். இதற்கமைய இந்த மாதத்தில் 73,048 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு குறிப்பிட்டுள்ளது. […]