இலங்கையில் தங்கம் 4,000 ரூபாவினால் அதிகரிப்பு

யுக்ரைன் போர் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை ஒரே நாளில், 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதென அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில், 1,871 டொலரில் இருந்து 1,974 டொலராக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இதன் காரணமாக, இலங்கையில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுன் […]
5 மணித்தியாலங்களுக்கு மேலாக மின் துண்டிப்பு

நாளை (25) பெரும்பாலான பகுதிகளுக்கு 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார். இதன்படி, நாளைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடமும் […]
டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகம்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிபொருள் தொகை களஞ்சியசாலையின் தலைவர் நாலக்க பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒக்டேன் 92 ரக மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விநியோகமும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளொன்றில் 5,000 மெட்ரிக் டன் டீசலும், 4,000 மெட்ரிக் டன் பெற்றோலும் நாட்டிற்கு அவசியமாகும். இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட […]
நாளையும் 4 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

சுழற்சி முறையில் நாளையும் (24) நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார். இதன்படி, நாளைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்களும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் […]
மசகு எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது

கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டமையை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. அதற்கமைய, பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் […]
லிட்ரோ நிறுவனம் கடும் நெருக்கடியில்

நாட்டின் முன்னணி எரிவாயு விநியோக நிறுவனமான லிட்ரோ நிறுவனம் தற்போது எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் மாதத்துக்கான அத்தியாவசிய எரிவாயுக் கையிருப்பு எதுவும் விண்ணப்பம் செய்யப் படாததன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு மாதத்துக்கான இருப்புகளை முந்தைய மாதம் 10 ஆம் திகதிக்குள் விண்ணப் பம் செய்ய வேண்டும். ஆனால் இதுவரை லிட்ரோ நிறுவனத்தால் மார்ச் மாதத்துக்கான முழு விண்ணப்பத்தையும் செய்ய முடியவில்லை. நிறுவன வட்டாரங்களின்படி, நாடு முழுவதும் […]
50 வீத பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை

எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 50% தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அடிக்கடி ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ்கள் மேலும் தடம் புரளும் அபாயம் உள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகளில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா முடக்கலின் போது பேருந்துகளை இயக்குவதை நிறுத்தியதால் வேலை இழப்பை ஈடுசெய்ய அவர்கள் வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். […]