உணவுப் பொருள் கொள்கலன்கள் 2500 துறைமுகத்தில் தேக்கம்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 2500 கொள்கலன்கள் துறைமுகத்தில் இன்னமும் சிக்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி யாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக பருப்பு, சீனி, செத்தல் மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து […]

ரஷ்யா மீது இலங்கை பொருளாதாரத் தடை?

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் எந்தவொரு நாட்டின் சார்பாகவும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு பலமான பொருளாதாரம் இலங்கையிடம் இல்லை என்று கூறிய அவர், […]

இலங்கையில் 4000 உக்ரேனியர்கள், விசா காலத்தை நீடிக்க நடவடிக்கைகள்

சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் 30 நாட்களாக நாட்டில் இருந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசா இன்னும் 30 நாட்களில் காலாவதியாகி விடும். எனினும், உக்ரேனில் நிலவும் மோதல் காரணமாக இலங்கையில் தங்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் விசாவை நீடிக்குமாறு சுற்றுலா அமைச்சு சம்பந்தப்பட்ட பயண முகவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியான பின்னர் உக்ரைனுக்கு நேரடி விமான சேவைகள் இருக்காது என்பதால் […]

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் முன்பாக யுக்ரைன் சுற்றுலாப்பயணிகள் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக காரியாலயம் முன்பாக யுக்ரைன் சுற்றுலாப்பயணிகள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டை நிறுத்துமாறு கோரி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் பதாகைகளை எந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று பிற்பகல் 4 மணி வரையான நிலவரப்படி, 4,120 யுக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி […]

5 மணிநேரத்துக்கு அதிக காலம் மின் தடை

வார இறுதியில் மின்தடை நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் இரவு வேளையில் மின் தடை மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும், பகல் நேரங்களில் A,B,C ஆகிய வலயங்களுக்கு 3 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. 5 மணிநேரத்துக்கு அதிக காலம் மின் தடை இன்றைய தினம் 5 […]

மில்கோ நிறுவனத்துக்கு ஜனாதிபதி விஜயம்

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மில்கோ தொழிற்சாலையை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று (25) காலை பார்வையிட்டார். தொழிற்சாலை வளாகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, நிறுவனத்தின் உற்பத்தி, பொதியிடல் மற்றும் விநியோகப் பிரிவுகளைப் பார்வை யிட்டார். தேசிய பால் சபை 1956 இல் நிறுவப்பட்டதுடன் 1986 இல் மில்கோவாக மாற்றப்பட்டது. முதற்கட்டமாக பதனிடல் பால் உற்பத்திக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்நிறுவனம், தற்போது தயிர், ஐஸ்கிரீம்போன்ற பொருட்களை தயாரித்து உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளது. அம்பேவெல, திகன, பொலன்னறுவை மற்றும் நாரஹேன்பிட்ட ஆகிய நான்கு தொழிற்சாலை […]

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 37 சதம். விற்பனை பெறுமதி 275 ரூபா 83சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 86 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 40 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]