இலங்கை வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் அவசியமில்லை

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. அதன்படி, இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு, பயணத்துக்கு முன்னரான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லையென சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும் நாட்டுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதோடு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை […]

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை ….

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள செயற்படவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த தொழிற்சாலையை தங்கி வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். மீள்குடியேறி பன்னிரெண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் குறித்த தொழிற்சாலையின் […]

இலங்கையில் இணைய குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15 முதல் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். எனவே, இணையவழி மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். படங்களை காண்பித்து பெண்களை அச்சுறுத்தும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும். சகல சந்தர்ப்பங்களிலும் மோசடிகள் மற்றும் […]

திங்கட்கிழமை முதல் மீண்டும் மின் துண்டிப்பு

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பகல்வேளையில் ஏ.பி மற்றும் சி வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 38,400 மெற்றிக் டன் பெற்றோல் […]

எரிபொருள் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விலை அதிகரிப்பின்படி, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 203 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 139 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் […]

ரஷ்யா மீதான பொருளாதாரத்தடை இலங்கைக்கு பாதிப்பு

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகளால் இலங்கை நேரடியாக பாதிக்கப் படும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். இலங்கையின் முன்னணி தேயிலை இறக்குமதி யாளர்களில் ஒன்றான ரஷ்யாவுடனான ஒப்பந்தங்களில் இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தேயிலை ஏற்றுமதிக்கு பணம் கிடைப் பதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஐரோப் பிய நாடுகள் ரஷ்ய வங்கி அமைப்புடன் தனித்தனி யாக கொடுக்கல் வாங்கல் செய்தால் இலங்கைக்கு எதிர்மறையான அணுகுமுறையே ஏற்படும் […]

இலங்கையில் சடலங்களை எம்பாமிங் செய்ய தட்டுப்பாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால் எதிர்காலத்தில் நாடு முழுவதும் ஃபோர்மலின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மலர்ச்சாலை வியாபாரிகள் தெரிவித் துள்ளனர். நாட்டில் தற்போது போதுமான அளவு ஃபோர்மலின் மட்டுமே இருப்பதாகவும், இதனால் பூக்கடைத் தொழில் எதிர்காலத்தில் சிக்கலுக்குள்ளாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஃபோர்மலின் இறக்குமதி செய்யப் படுகிறது. எரிபொருள் போன்றஅத்தியாவசிய பொருட்களுக்கு டொலர் வழங்கும் முயற்சியில் அரசாங்கம் ஃபோர்மலின் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர். உடல்களை எம்பாமிங் செய்வதில் […]