ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடை

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய்க்கு கனடா தடை விதித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் செயற்பாடுகளுக்கு மசகு எண்ணெயின் மூலம் கிடைக்கும் வருமானம் வழிவகுக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்நாட்டு தரவுகளின் பிரகாரம், கனேடிய அரசாங்கம் கடந்த வருடத்தில் 170 மில்லியன் யூரோ பெறுமதியான வலுசக்தி உற்பத்திகளை இறக்குமதி செய்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]

மஞ்சள் தூள் சலுகை விலைக்கு

சதொச விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளை ரூ.2,400க்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் மஞ்சள் தூள் சுமார் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, 350,000 கிலோ கிராமுக்கும் அதிகமான மஞ்சள்களை பலசரக்கு கூட்டுத்தாபனம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு […]

டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்குள் இலங்கை TV

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் இன்று (28) முதல் இடம்பெறவுள்ளன. இது இலங்கையின் 40 வருட கால தொழில் நுட்ப வரலாற்றில் இடம்பெறும் பாரிய முன்னேற்றமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பு1979 ஆம் ஆண்டு கொழும்பு, பன்னிப்பிட்டியவில் சிறிய கட்டடம் ஒன்றில் ‘ரி.வி. ஸ்ரீலங்கா’ என்னும் பெயரில் ஒளிபரப்பப்பட்டது. இந்த பரீட்சார்த்த ஒளிபரப்பு சான் விக்ரமசிங்க, அனில் […]

15மில்லியன் தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கைது

15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலையச் செய்தியாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 490 கிராம் எடையுள்ள மூன்று தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி […]

இரசாயன உரத்தை விநியோகிப்பதில் சிக்கல்

சிறுபோகத்தின்போது, இரசாயன உரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்படக்கூடும் என உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தின்கீழ் விநியோகிப்பதற்காக, 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் மியூரியேட் ஒவ் பொட்டாஸ் உரத்தை, இரண்டு அரச உர நிறுவனங்களின் ஊடாக இறக்குமதி செய்ய, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மியூரியேட் ஒவ் பொட்டாஸ் உரமானது, பெலாரஸில் இருந்தே அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது உக்ரைன் போர் காரணமாக, உர இறக்குமதியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் […]

டீசல் கப்பலொன்று நாளை நாட்டை வந்தடைய உள்ளது

37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாளை மாலை நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கான நிதி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இதேநேரம், 35,300 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறிருப்பினும், இன்றைய தினமும் நாட்டின் பல பாகங்களில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாள், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் […]

நாளையும் நீண்ட நேரம் மின்வெட்டு: விபரம் இணைப்பு

நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளை (2) சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை வேளையில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அத்துடன், இரவு வேளையில் 2 மணித்தியாலங்களும் […]