மின்சார நெருக்கடி உடனடியாக தீர்க்கப்படும்!

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், பொதுமக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, உடன் அமுலாகும் வகையில், மின்சார உற்பத்திக்கு அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதை, திறைசேரியும், மத்திய வங்கியும் உறுதிப்படுத்தும் என்றும் ஜனாதிபதி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து […]

26 ஆண்டுகளுக்குப்பின் 7 1/2 மணிநேர மின்வெட்டு

26 ஆண்டுகளுக்கு பின்னர், இன்றைய தினம், ஏழரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 5 மணிநேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. மின்சார உற்பத்திக்கு […]

பழங்களை சாப்பிட்ட பின்னர் இருளில் இருப்பதா?

அப்பிள் ஒரேஞ் திராட்சை பழங்களை சாப்பிட்ட பின்னர் இருளில் இருப்பதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். அப்பிள் ஒரேஞ் திராட்சை பழங்களை சாப்பிட்டபின்னர் இருளில் இருப்பதா அல்லது அத்தியாவசிய பொருட்களிற்கு செலவு செய்வதற்காக மிகவும் பெறுமதியான டொலர்களை சேமிப்பதற்காக தியாகங்களை செய்யவேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் எனஅமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னுரிமைகளை தீர்மானிக்காமல் அரசாங்கம் தொடர்ந்தும் அப்பிள் திராட்சை போன்ற பழங்களை இறக்குமதி செய்கின்றது,நாங்கள் தேனை இறக்குமதி செய்துள்ளோம் ஆனால் முக்கியமான சில மருந்துகள் […]

எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சூழ வாகன நெரிசல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன வரிசைகள் காரணமாக கொழும்பு வீதிகள் பலவற்றில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒருகொடவத்தை, ஹோர்டன் பிளேஸ், பம்பலப்பிட்டி மற்றும் கொம்பனித் தெரு போன்ற பல பிரதான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒருகொடவத்தைச் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மித்த வாகன நெரிசல் காரணமாக புதிய களனி பாலத்தின் ஊடாக பேலியகொடை நோக்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. கொழும்புக்கு வெளியேயும் மக்கள் நெரிசல் […]

நாடெங்கும் டீசல் விநியோகத்துக்கு கட்டுப்பாடுகள்

கடுமையான டீசல் நெருக்கடியை அடுத்து நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங் களுக்கு டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்து வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தா பனம் (CPC) நேற்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. எண்ணெய் சேமிப்பு முனையங்களுக்கு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தற்போது நான்கு நாட்களுக்கு டீசல் இருப்பு உள்ளதாகவும், எனவே அந்தப் பங்குகளை நிர்வகிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் […]

இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியின‍ை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதன்படி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை சுழற்சி முறையில் 5 மணிநேர மின்வெட்டும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை 2 1/2 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 […]

யாழ்மாவட்டத்தில் மேலதிகமாக 30 ஆயிரம் பெட்ரோல் கொள்முதல் செய்யப்படுகிறது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் தற்போது எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் இந்த நிலைமையை இல்லாமல் செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாள் ஒன்றுக்கு யாழ் மாவட்டத்துக்கு 1 லட்சம் லீற்றர் பெற்றோல் […]