7 ஆண்டுகளுக்குப் பின்னர் உயர்வடைந்த எண்ணெய்!

ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலராக உயர்வடைந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் உறுப்பினர்கள், அவசரகால இருப்பிலிருந்து 60 மில்லியன் பீப்பாய்களை வெளியிட இணங்கியுள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்க வெஸ்ட் டெக்ஸாஸ்இடைநிலை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 109 டொலராக அதிகரித்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]

வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து […]

எரிபொருள் விநியோகம் வழமை ….

இன்று (03) தொடக்கம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களில் விநியோக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேவையற்ற பீதியின்றி எரிபொருளை சேகரிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. தற்பொழுது நாடு முழுவதிலும் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதுடன், இது இன்றைய தினத்திற்கு பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் என்று எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தாமதம் இன்றி எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை […]

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு.

இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை முடித்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, உடனடியான கொள்கைப் பதிலளிப்பையும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தையும் பாராட்டியுள்ளது. இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் முடித்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் கடனைக் குறைக்கவும் நம்பகமான மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கான அவசரத்தையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் […]

எரிவாயு இறக்குமதிசெய்து விநியோகிப்பதில் சிக்கல்

வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ள போதிலும் நாணயக் கடிதங்களை திறந்து டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால் அவற்றை இறக்க முடியாதுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், லிட்ரோ எரிவாயு விநியோகம் தொழிற்சாலைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு இருப்புக்கள் […]

இலங்கை: ஏடிஎம் அட்டைகளுக்கும் தட்டுப்பாடு!

வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் வரவட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டோனி ஜோன் புள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன், டொலர் தட்டுப்பாடும் அதனை இறக்குமதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை காரணமாக புதிய கடனட்டைகள் முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் காலாவதியான அட்டைகளுக்கான புதிய அட்டை என்பவற்றை பெற்றுக் கொள்வதில் […]

பிப்ரவரியில் அதிக ரஷ்யா சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

2022 பெப்ரவரியில் இலங்கை 96,507 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, இது ஜனவரியில் 82,327 ஆக இருந்த நிலையில், சுற்றுலாவிற்கு நாடு மீண்டும் திறக்கப்படுவதால், ரஷ்யாவின் தலைமையில் அதிக ரஷ்யா சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் அரச அலுவலகத்தின் தரவு காட்டுகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்னர் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு 200,000 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். பிப்ரவரியில் ரஷ்யா 15,340 வருகையுடன் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து இந்தியா 12,744, இங்கிலாந்து 10,642, ஜெர்மனி 7,740 மற்றும் […]