சூரியகாந்தி தாவர எண்ணெய்யின் விலை உயர்வு!

யுக்ரைன் போர் காரணமாக தாவர எண்ணெய்யின் விலையும் கணிசமான அளவு உயர்வடைந்துள்ளது. உலகின் முன்னணி தாவர எண்ணெய் நுகர்வு நாடான இந்தியாவை இது பாதித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உலகளவில் 75 சதவீத சூரியகாந்தி எண்ணெய்யை யுக்ரைன் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் […]

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கை நிலைப்பாட்டை, மேலும் இறுக்கமாக்கியுள்ளது. இதன்படி, நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம், 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை நில் கடன் வசதி வீதம், 7.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம், 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதம், 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற மூலதன […]

சதொச ஊடாக 1 kg சம்பா அரிசி 128 ரூபாவிற்கு விற்பனை

நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த வருட இறுதி வரை ஒரு கிலோ சம்பா அரிசியை 128 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ 105 ரூபா வீதம் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுனார். அரிசி விலை அதிகரித்துள்ள போதிலும், இந்த வருட இறுதி வரை, சதொச ஊடாக குறித்த விலைகளுக்கு உட்பட்டதாக 3 வகை அரிசிகளையும் கொள்வனவு செய்ய […]

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கம்!

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் இன்று (03) காலை முதல் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என […]

மழை பெய்யாவிட்டால் தினமும் 16 மணி நேர மின்வெட்டு – இலங்கை மின்சார

பருவ மழை பெய்யாதுவிடின் ஏப்ரல் மாதத்தில் தினமும் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் எச்சரிக்கின்றனர். தேவையற்ற மின் விளக்குகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்து வதே தற்போதைய மின் நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்றும் கூறுகின்றனர். அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வாங்குவது பெரும் சிக்கலாக இருக்கும் இந்த நேரத்தில், தடையில்லா மின்சாரம் வழங்க எந்த வழியில் சென்றாலும் செலவு ஏற்படும் என பொறியியலாளர்கள் […]

இலங்கை அரசின் புதிய அறிக்கை: தனி நபர் ஒருவருக்கு மாதம் 5908 ரூபாய் போதும்

தனிநபர் 5 ஆயிரத்து 908 ரூபாவில் ஒரு மாதத்திற்கான தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என அரசாங்கத்தின் சனத் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இதனை கூறியுள்ளது. இலங்கையில் ஒரு நபர் வறுமையின்றி தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள 5 ஆயிரத்து 908 ரூபாய் போதுமானது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் மாவட்டங்களுக்கு அமைய வறுமை கோடு நிலவரம் தொடர்பாக இந்த அறிக்கை […]

ஆடை தயாரிப்பு ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு

இலங்கையின் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி வருமானம் கடந்த 5 வருடங்களை விட 488 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது தேசிய உற்பத்தியில் அதிகளவான பங்களிப்பினையும் அந்நியச்செலாவணி வீதத்தில் அதிகரிப்பினையும் வேலை வாய்ப்பினையும் அதிகரித்துள்ளதாக இணை ஆடை தொழிற்சங்க செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்தார். ஜனவரி மாத ஏற்றுமதி மூலம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெறப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது முன்னைய காலங்களிலும் பார்க்க 23% அதிகரிப்பாகும். 2021 டிசம்பர் வரையிலான 12 மாத […]