எரிபொருள் கப்பலுக்கு டொலர் செலுத்தப்பட்டது

இலங்கைக்கு வந்த மற்றுமொரு எரிபொருள் கப்பலுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கப்பலிலுள்ள 28,300 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 9000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் நாளை முதல் இறக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அண்மையில் 37,300 மெற்றிக் தொன் டீசல் ஏற்றி வந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்ட தாகவும், அதன்படி நாளைய தினம் நாட்டின் டீசல் […]

இலங்கைக்கு அனுப்பும் ஒரு அமெரிக்க டொலரொன்றுக்கு 240 ரூபா‍

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்து வதற்கான யோசனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள – தமிழ் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கை யிலுள்ள தங்கள் குடும்பங்களுக்கு செலவு செய்ய அதிக பணம் அனுப்புவது வழக்கம். எவ்வாறாயினும், இலங்கையில் டொலர் நிலைமையின் தற்போதைய சூழலில், பல வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டவிரோதமான வழிகள் மூலம் […]

2 நாட்களில் 7,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் மாதத்தின் முதல் இரண்டு தினங்களில் சுமார் 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சினால் நேற்று (03) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டிற்கு மார்ச் மாதம் 1 ஆம் திகதி 2,902 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆம் திகதி 3,994 சுற்றுலாப் பயணிகளுமாக 6,896 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இது தொற்று நோய்க்கு பின்னரான சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது. இவர்களில் […]

தெங்கு சார் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் டொலர் வருமானம்

இலங்கையில் கடந்த வருடம் (2021) தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26% அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள், தென்னை நார் உற்பத்திகள், தென்னை மட்டை உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில், உள்ளூர் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு பாரிய அளவில் […]

இலங்கை மத்திய வங்கி மேலும் இறுக்கமடையச் செய்கின்றது

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது. அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டபொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு […]

மணல், கல், கிரவல் விலை அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் டீசலில் இயங்கும் இயந்திரங்கள் பல நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் டிப்பர் வாகனங்களில் செயற்பாடுகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன . மணல், கிரவல், கல் என்பனவற்றின் விலைகள் திடீரென்று அதிகரித்துள்ளது . நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதால் குறித்த நேரத்திற்குள் தமது வேலைகளை முடித்துக்கொள்ள முடியவில்லை நேர விரையத்தினால் குறிப்பிட்ட நேரத்திற்கு பொருட்களை கொண்டு சென்று வழங்க முடியவில்லை என்று டிப்பர் சாரதிகள் தெரிவிக்கின்றனர் . அத்துடன் கல் உடைக்கும் இயந்திரங்கள் பெக்கோ இயந்திரங்கள் […]

நாட்டை வந்தடையவுள்ள டீசல் தாங்கிய கப்பல்!

28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. அந்த டீசலை, இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த முடியும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், டீசல் இன்மையால் நேற்றைய தினமும் நாட்டின் பல பாகங்களிலும் […]