எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் மக்கள்

அட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று (05.03.2022) நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நாடளாவிய ரீதியில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்திலும் டீசல் இருக்கவில்லை. சுமார் 4 நாட்களுக்கு பிறகு இன்று டீசல் விநியோகிக்கப்படுகின்றது. டீசல் இன்மையால் பலரின் வாகனங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் அப்படியே நிற்கின்றன. சுமார் 20 லீட்டர் […]
வடக்கில் கடல் உணவுகளின் விலைகள் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் உணவுகளின் விலைகள் மிக மோசமாக அதிகரித்து காணப்படுகின்றமையால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் உணவுகளின் விலைகள் இன்றைய தினம் சடுதியாக அதிகரித்த நிலையில் காணப்பட்டது. குறிப்பாக கிளிநொச்சி பொதுச்சந்தை பகுதியில் பெரிய மீன் வகைகள் ஒரு கிலோ 800 ரூபா முதல் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் இறால் கணவாய் ஆகியனவும் 1200 ரூபாவிற்கு மேல் விற்பனை […]
யாழில் வெதுப்பகங்களை மூடும் நிலை.

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடன் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் யாழில் வெதுப்பக உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள். அதன் போது, நாம் எமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் […]
கொழும்பு பணச் சலவைக்கு எந்த வகையிலும் இடமில்லை

கொழும்பு துறைமுக நகரத்தில் பணமோசடிக்கு எவ்வித இடமுமில்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த முடிமெனவும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளருமான கலாநிதி பிரியத் பந்து விக்கிரம அவர்கள் தெரிவித்தார். ‘துறைமுக நகரமும் எதிர்கால பொருளாதாரமும்’ என்ற தொனிப்பொருளில் நேற்று (04) ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கலாநிதி பிரியத் பந்து விக்கிரம மற்றும் […]
ரஷ்யா யுக்ரைன் இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு பாதிப்பு

ரஷ்ய – யுக்ரைன் மோதலை அடுத்து ரஷ்ய வங்கிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், கொழும்பு தேயிலை ஏலவிற்பனை விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாக ரஷ்யாவும் யுக்ரைனும் உள்ளன. இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் நீண்ட காலத்திற்கு தொடரும் பட்சத்தில் தேயிலை ஏற்றுமதி பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியான தருணத்தில் தேயிலை வர்த்தகத்தில், பாதகத்தன்மை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்த சாரதிகள்

நேற்று (04) காலை ஹட்டனில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொழும்பி லிருந்து வந்த பவுசர் ட்ரக் வண்டியில் இருந்து 6600 லீற்றர் டீசல் விடுவிக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் ஐஓசி மற்றும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மூன்று நாட்களாக எரிபொருள் இல்லாததால், வாகனச் சாரதிகள் எரிபொருள் நிரப்புவதற்காக பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்தியிருந்தனர். நேற்றுக் காலை முதல் 3000 ரூபா பெறுமதியான டீசல்,அவர்களது வாகனங்கள் மற்றும் கொள் கலன்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]
அனைத்து சமூக ஊடகங்களையும் நிறுத்தும் ரஷ்யா

ரஷ்யாவில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் சமூக ஊடக வலையமைப்புகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து தவறான தகவல்கள் பரிமாறப்படுவதற்குத் தடையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல சர்வதேச ஊடகங்களும் ரஷ்யாவிலிருந்து செய்திகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டன. ரஷ்ய இராணுவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் புதிய ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் […]