ஒரு டொலருக்கு 240 ரூபா

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு உள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு அதிக பணம் அனுப்புவது வழக்கம். எவ்வாறாயினும், இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தமது பணத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு அனுப்புகின்றனர். இந்நிலைமை காரணமாக […]
ஆடை ஏற்றுமதி 487.6 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது!

கடந்த 5 வருட காலப்பகுதியில், 2022 ஜனவரி மாதம் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவலை தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதித்துறை வழமைக்கு திரும்புவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாக பெறப்பட்டுள்ளது. இந்த தொகை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 452 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார […]
இலங்கைக்கு கடன் செலுத்துவதற்கான வல்லமை உள்ளது

இலங்கை பெற்றுள்ள கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ,இலங்கைக்கு இன்னமும் கடன் செலுத்துவதற்கான வல்லமை காணப்படுவதாகவும் கூறினார். தமது தீர்மானங்களையும் கொள்கையையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதிக்கும் நிதியமைச்சருக்கும் அவற்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கி என்ற அடிப்படையில் அதன் நிலைப்பாட்டையும் நாட்டிற்குச் செய்ய வேண்டிய விடயங்களையும் அரசியல் பேதம் இன்றி தெளிவுபடுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். பணிப்புரை வழங்குவது மத்திய வங்கியின் பொறுப்பாகும். […]
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகாிப்பு

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,970 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. யுக்ரைன் நெருக்கடி தங்கத்தின் விலை உயர்வுக்கு மிகவும் நெருக்கமான காரணியாக உள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000 டொலரை தாண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் […]
விசா, மாஸ்டர்கார்ட் செயற்பாடுகளை இடைநிறுத்தின!

அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்யாவில் உள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுடனான அனைத்து வணிகங்களையும் இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்னும் சில நாட்களில், ரஷ்யாவினுள் வழங்கப்பட்ட விசா அட்டைகள் மூலம் முன்னெடுக்கப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் நாட்டிற்கு வெளியே செயற்படமாட்டாது என்றும் வெளிநாடுகளால் வழங்கப்படும் விசா அட்டைகள் ரஷ்யாவினுள் செயற்படமாட்டாது எனவும் விசா நிறுவனம் […]
இந்தியா, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்

இலங்கைக்கு இந்தியா கொள்கையளவில் உத்தரவாதமளித்த ஒரு மில்லியன் டொலர் கடன் தொகை இலங்கை அரசாங்கம் உத்தரவாதங்களை அளிக்கின்ற வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தனது பொருளாதார நெருக்கடியை எவ்வாறு நீண்டகால அடிப்படையிலும் குறுகிய கால அடிப்படையிலும் கையாளப்போகின்றது என்பது குறித்த திட்டமொன்றை முன்வைக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் வடக்குகிழக்கில் இந்தியா நீண்டகாலமாக முன்னெடுக்கவிரும்பும் அபிவிருத்தி திட்டங்களிற்கான தடைகளை நீக்கவேண்டும் […]
உக்ரேனில் குண்டு மழை, அமெரிக்காவில் டொலர் மழை

அமெரிக்க பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது எரிபொருள் ஏற்றுமதியும் ஆயுத விற்பனையுமாகும். 2020 ல் ஆரம்பித்த கொரானோ நெருக்கடியால் எரிபொருள் விலை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. போர்கள் நடக்காதால் ஆயுத விற்பனை முடங்கிப்போய்விட்டது. அமெரிக்கப் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றதுடன் டொலரின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துவிட்டது. இந்தக்காலகட்டத்திலே பிரான்ஸ் அவுஸ்திரேலியாவுடன் நீர் மூழ்க்கி கப்பல்கள் வழங்குவது தொடர்பான பாரிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது . ஆனால் அமெரிக்கா பிரான்சுக்குத் தெரியாமல் அதன் முதுகில் குத்தி அவுஸ்திரேலியாவுடன் இரகசியமாகப் பேரம் பேசி […]