இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 269 ரூபா 2 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 224 ரூபா 34 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]
பாரிய சீமேந்துத் தொழிற்சாலை இன்று திறப்பு

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்துத் தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறக்கப்படவுள்ளது. மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வலயத்தின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகும். முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு மில்லியன் மெற்றிக்தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும். ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என […]
இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி!

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 19.38 மில்லியன் கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை அதிகளவில் ரஷ்யா மற்றும் ஈராக்கினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், சீனாவிற்கு கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை தொகையினை காட்டிலும் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 இலட்சத்து 38 ஆயிரம் கிலோகிராம் ஏற்றுமதி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தேயிலை உற்பத்தியானது […]
இலங்கையில் 60 % விகிதமான சிற்றுண்டிச்சாலைகளுக்கு பூட்டு

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள 60 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர்களில் மாத்திரம் சுமார் 1,500 சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அரச வைத்தியசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளை இன்றைய தினம் முதல் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மின்சார பிரச்சினை காரணமாக குளிர்சாதன […]
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு

சந்தையில் அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பது தொடர்பில், கண்காணிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது. நிதியமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவினால் பிரதேச செயலகங்களின் ஊடாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் அரிசி, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் ஆராயவுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக […]
இன்று மின் துண்டிப்பு அமுலாகும் விதம் அறிவிப்பு!

இன்றைய தினமும் நாட்டின் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக இந்த துண்டிப்பு அமுலாக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 […]
மசகு எண்ணெய் விலை 130 டொலராக அதிகரிப்பு!

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது. ரஷ்யா – யுக்ரைன் போர் நெருக்கடியால் மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகிறது. இதனால் மசகு எண்ணெய் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மேலும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு மசகு எண்ணெய் விலை உயர்வானது, பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, அந்த நாடுகளில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கமாக உள்ளமை […]