2,500 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில்

டொலர் இன்மையால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள், தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனி, கோதுமை மா, கடலை, பருப்பு உள்ளிட்ட பல உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த காலத்தில் இடைக்கிடையே டொலர் கிடைக்கப்பெற்ற போதிலும், தற்போது வங்கிகளிடமிருந்து டொலர் கிடைக்கப் […]
டொலருக்கு மேலதிக கொடுப்பனவு இடைநிறுத்தம்!

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார். அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர், தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்காக, மத்திய வங்கியினால் டொருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நெகிழ்வுத் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார். இதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய தினம் 225 ரூபா 20 […]
நாட்டில் மதுபானத்துக்கு தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்துண்டிப்பு காரணமாக எத்தனோல் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று வெளியாகிவருகிறது. எனினும் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மதுவரித் திணைக்களத்தின் உரிமம் பெற்ற 23 மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான உற்பத்திக்கு தேவையான எத்தனோல் உள்ளிட்ட மூலப்பொருட்களை தற்போது உள்ளூர் சந்தையிலிருந்து […]
உலகிலேயே சிகரெட்டுக்கு அதிக விலை இலங்கையில்

உலகிலேயே சிகரெட்டுக்காக அதிகளவு செலவழிக்கும் நாடாக இலங்கை இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அண்மைய அறிக்கை தெரிவிக்கின்றது. 2020 ஆம் ஆண்டுக்கான போக்குகள் மற்றும் இலங்கையர்களின் சராசரி தனிநபர் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இலங்கைச் சந்தையில் முறையான வர்த்தக நாமங்களில் இருந்து விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளின் அதிக விலைகள் காரணமாக, உலகளாவிய சட்டவிரோத சிகரெட் வர்த்தகத்தில் இலங்கை முன்னணி இலக்காக மாறியுள்ளதாக அறிக்கை எச்சரித்துள்ளது. இலங்கையில் தற்போதைய […]
ரஷ்யாவின் எண்ணை ஏற்றுமதிக்கு தடை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவநடவடிக்கைக்கு தண்டனை வழங்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஸ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவுள்ளார். ரஷ்யாவின் எண்ணெய்க்கு தடைவிதிப்பதற்கு அமெரிக்காவின் இரு கட்சிகளும் பைடனிற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் எண்ணெய்க்கா ரஷ்யாவை நம்பியிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயக்கம் வெளியிட்டுள்ள நிலையில் அமெரி;க்கா இந்த நடவடிக்கையை ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கவுள்ளது. மேற்குலகம் எண்ணெய்க்கு தடை விதித்தால் ஜேர்மனிக்கான எரிவாயுவிநியோகத்தை தடை செய்யப்போவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்யாவிடமிருந்து 40 […]
நிலக்கரி தட்டுப்பாடு! 15 மணி நேர மின் வெட்டு?

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலக்கரி இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட பணம் எரிபொருளை இறக்குமதி செய்யப் பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட் டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால், மின் உற்பத்தி நிலையங்களில் சுமார் 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என அந்த வட்டாரங்கள் சந்தேகிக் கின்றன. இவ்வாறான மின்வெட்டு நாட்டிலேயே மிக நீண்ட காலமாக இருக்கும் எனவும் மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏப்ரல் இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதியைத் […]
இலங்கையில் கோழி முட்டை விலை ரூ. 28

வரலாற்றில் இல்லாத உயர்வுக்கு என்ன காரணம்? இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முட்டைக்கு இவ்வாறு விலை கூடியுள்ளமை இதுவே முதல் தடவை. பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது. கோழி தீவனங்களுக்கான விலை அதிகரிப்பே முட்டையின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கோழிப் பண்ணை உரிமையாளர் எம்.ஏ.எம். தாஹிர். முன்னர் 3,200 […]