எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை!

இயன்ற அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்து, எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் புதிய தலைவரான ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா தெரிவித்துள்ளார். இன்று காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு வருகின்ற கப்பல்களிலுள்ள எரிபொருளை, களஞ்சியப்படுத்தும் முனையங்களுக்கு கொண்டு செல்வது இந்த நிறுவனத்தின் பணியாகும். குறித்த சந்தர்ப்பம் முதல் இடம்பெறும் பணிகள், தொடர்ச்சியாக செயற்திறனுடன் இடம்பெற வேண்டும் […]

தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் தேங்காய் எண்ணெய்க்கு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிக்க சில பல்தேசிய நிறுவனங்கள் தயாராகி வருவதாக உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் தேங்காய் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இருப்பதாகவும் […]

ஓமான் கைத்தொழில் சபையின் தலைவர் சந்திப்பு

ஓமானுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தலைவருக்கும், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையில் கடந்த தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கயின் உற்பத்திகளுக்காக ஓமான் சந்தையில், அதிக வாய்ப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஓமானின் உற்பத்திப் பொருட்களை, குறைந்த விலையில் இறக்குமதி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச்சேவை

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் கூட்டு நிறுவனம் ஆகியன இணைந்து (Liyana sea food) முன்னெடுத்துள்ள கடல் சுற்றுலா படகான “விக்லியா” (“VICLIYA”) படகின் […]

வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்ய முடியாது

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவ்வாறு அனுமதியின்றி வெளிநாட்டு பண பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் தொர்பில்; ஏதேனும் தகவல் கிடைக்குமிடத்து, மத்திய வங்கியின் பரிவர்த்தனை திணைக்களத்தின் 011 2398827, 011 2477375 அல்லது 011 2398568 என்ற தொலைபேசி இலக்கத்துதுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]

மரக்கறி செய்கை 40 சதவீதமளவில் வீழ்ச்சி!

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மரக்கறி செய்கை 40 சதவீதமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய ஒன்றியம் தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாட்டினால், வர்த்தகர்கள் வாகனங்கள் மூலம் விளைநிலங்களுக்குச் சென்று, அறுவடைகளை கொள்வனவு செய்வதையோ அல்லது அவற்றை சந்தைக்கு கொண்டு செல்வதையோ அவதானிக்கக் கூடியதாக இல்லையென அந்த சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதேநேரம், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, சிற்றுணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையால், வர்த்தகர்கள் சந்தைக்கு மரக்கறிகளை கொள்வனவு […]

24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் வைத்தியசாலைகள், பாதுகாப்பு இடங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் போன்ற 24 மணி நேரமும் மின்சாரம் அவசியமான இடங்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்காக தொடர்ச்சியாக இயங்கக்கூடிய விசேட செயற்பாட்டு மையத்தை நிறுவுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறான பின்னணியில் அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் திட்டமிடுவதாக இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் […]