காகித பற்றாக்குறையால் பாடப்புத்தகங்களை அச்சிடுவதிலும் சிக்கல்

அச்சிடல் நடவடிக்கைகளுக்கு தேவையான காகிதம் இன்மை காரணமாக அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் காகிதங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்பட்டது. பின்னர் துறைமுகத்தில் சிக்கியிருந்த காகிதம் தாங்கிய 8 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட காகிதம் தற்போது […]
20,000 மெட்ரிக் டன் எரிபொருள் கையிருப்பில்: வரிசைகள் குறையும்

நேற்றைய தினமும், நாடளாவிய ரீதியில், பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். இதேவேளை, நாட்டின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றது. எனவே மக்கள் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வரிசையில் […]
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தார்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி […]
வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த ரூபாய்

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. நாட்டிலுள்ள தனியார் வங்கிகளின் இன்றைய நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாகவும் கொள்வனவு விலை 248.34 ரூபாவாகவும் பதிவு செய்துள்ளது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 344.72 ரூபாவாகும் கொள்வனவு விலை 325.48 ரூபாவாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 289.93 ரூபாவாகும் கொள்வனவு விலை 272.47 ரூபாவாகவும் […]
டொலர் வேண்டுமானால் ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியுறச்செய்யவேண்டும் – இந்திய

கடன்களின் நிலைபேறானதன்மை குறித்து உடனடி மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறும் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோர் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் வலியுறுத்தியுள்ளனர். வெளிநாட்டுக்கொடுக்கல், வாங்கல்களின் போது அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவிற்கு மேற்படாத தொகையில் பேணுவதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பினராலும் […]
தங்க விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது

உலக அளவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. அதற்கு ரஷ்ய-உக்ரைன் போர் சூழல் காரணமாகும். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 135,000 ஆகும். மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் […]
இலங்கை இறக்குமதி செய்ய 367 பொருட்களுக்கு தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள், […]