அப்பிள் பழத்திற்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள அப்பிள் பழங்களுக்கான இறக்குமதி வரி 200 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். திராட்சைச் பழம் மற்றும் மாதுளை பழம் ஆகியவற்றின் 50 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தோடம் பழம், நாராங்காய், உலர்ந்த திராட்சை மற்றும் பெயாஸ் பழம் உட்பட அனைத்து பழங்களுக்கான இறக்குமதி வரிகளும் அறவிடப்பட்டன. இந்த வரி அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் அப்பில், திராட்சை பழம், மாதுளை பழம் ஆகியவற்றின் விலைகள் பல மடங்காக அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை […]
தொழிற்சாலை கழிவிலிருந்து இயற்கை உரம்

இலங்கை சீனி நிறுவனத்திற்கு சொந்தமான செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை ஊடாக இயற்கை உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீனி உற்பத்தியின் போது வௌியேறும் கழிவுகளை சுற்றாடலுக்கு உகந்ததாக மாற்றி, அதனை இயற்கை உரமாக பயன்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ், இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் 40,000 மெட்ரிக் தொன் இயற்கை உரத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி […]
விசேட பொருளாதார வலயங்கள் அபிவிருத்தி

பல முக்கிய நகரங்களில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, உள்நாட்டு – வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான இந்தப் பிரதான நகர அபிவிருத்தியை, நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் முதலாம் கட்டத்தின் கீழ் காலி, பண்டாரவளை, இரத்தினபுரி மற்றும் திம்பிரிகஸ்யாய, கோட்டை, புறக்கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி […]
பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கும்

நாணய மாற்று வீதத்தை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைய நெகிழ்வுப் போக்குடன் தீர்மானிப்பதற்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, இன்று (10) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபா வரை அதிகரித்திருந்தது. சுமார் ஒரு வருடமாக டொலர் பெறுமதியை 202 ரூபா என்ற அளவில் நிலையாக பேணியதையடுத்து, இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் நாணய மாற்று வீதம் சுதந்திரமாக தீர்மானிக்கப்படுவதற்கு இடமளித்தது. நாணய மாற்று வீதம் நெகிழ்வுப்படுத்தப்பட்டதன் பின்ர் அரச வங்கிகளில் டொலரின் விற்பனை விலை […]
சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி அறிமுகப்படுத்திய நெகிழ்வுப்போக்குடன் கூடிய நாணய மாற்று கொள்கைக்கு அமைய, சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 260 ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கை வங்கியின் இன்றைய(10) நாணய மாற்று வீதத்திற்கு அமைய அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 225 ரூபா 50 சதமாகவும் விற்பனை பெறுமதி 230 ரூபாவாகவும் காணப்படுகின்றது. ⭕ கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 248 ரூபா 34 சதமாகவும் விற்பனை பெறுமதி 260 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. […]
மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள பால்மாவின் விலை

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்கப் பரிசீலித்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒரு கிலோ பால்மாவின் விலையை 300 ரூபாவாலும் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவாலும் அதிகரிக்கப்படுமெனச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளமையால் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை பால் […]
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 229 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 302 ரூபா 76 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 245 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 255 ரூபா 37சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]