இலங்கையில் 50 ஆண்டுக்கு முன் திருடிய 37 ரூபாயை பன்மடங்காக திருப்பிக் கொடுத்த கோவை தொழிலதிபர்

இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். 1970களின் மத்திய காலம் அது. […]

இலங்கைக்கு அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 55,353 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். இதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 16,163 பேரும், சீனாவிலிருந்து 3,963 பேரும், பிரித்தானியாவிலிருந்து 3,926பேரும் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு விலை அதிகரிப்பு!

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர். இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். எனினும், ஒரு கிலோகிராம் நாடு அரிசி […]

வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த சட்டவிரோத மதுபான போத்தல்கள்

சட்ட சுமார் ரூ.1 கோடி பெறுமதியான மதுபான போத்தல்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நுவரெலியா, லிதுல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயது வர்த்தகரான இவர் வெளிநாடுகளுக்குச் சென்று விமானம் மூலம் பல்வேறு பொருட்களை இந்நாட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (16) காலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-226) மூலம் […]

சொகுசு வாகனங்கள் – சட்டவிரோத இறக்குமதி: உடனடியாக கைது 

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கை சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்வது மாத்திரமின்றி சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் […]

ஒரு மணி நேரத்தில் கடவுச்சீட்டு…

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி நிலைமை நீடித்து வரும் நிலையில், ஒரு மணி நேரத்தில் அதனை பெற்றுக்கொண்ட அரச அதிகாரியினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் வியானி குணதிலக்க நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வந்து ஒரு மணித்தியாலத்தில் தனது புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார். அவர் காலை 10.15 மணிக்கு வந்ததாகவும், 11.30 மணியளவில் அவர் தனது இராஜதந்திர சிறப்புரிமையை ரத்து செய்துவிட்டு சாதாரண கடவுச்சீட்டை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய கோடீஸ்வரர்!

துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் ( 26). இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்இருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவருக்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி உள்ளார். இந்நிலையில் தனது மனைவி நீச்சல் உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக ஜமால் அல்நடக் ஒரு தீவையே […]