நாணய மாற்று விகிதம்: டொலர் பெறுமதி 259 ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 259 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 343 ரூபா 52 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 290 ரூபா 22 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]
முச்சக்கர வண்டி கட்டணமும் 1km 80 ரூபா

முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை 80 ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது. இரண்டாவது கிலோமீற்றரில் இருந்து 50 ரூபா அறவிடப்படுவது நியாயமானது என சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்திற் கொண்டு இந்தக் கட்டண அதிகரிப்பானது நியாயமானதென அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் மேலும் தெரிவிக்கிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க […]
விமான டிக்கெட்டின் விலை 27 சதவீதம் உயர்வு

அனைத்து விமானங்களுக்குமான டிக்கெட்டின் விலை 27% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (சிஏஏ) தெரிவித்துள்ளது. ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதால் இலங்கையில் விமான டிக்கெட் விலை 25-27 வீதம் வரை உயர்கிறது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் இலங்கைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது 25- 27 வீதம் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என […]
எரிவாயு; வடக்கிலுள்ள உணவகங்களும் மூடப்படுகிறது

எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வடக்கில் உள்ள மக்களும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் எரிவாயு பற்றாக்குறையால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய உணவகங்களும் தற்போது மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து […]
தங்கத்தின் விலை 140,000 ரூபாவை தாண்டியது

நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இன்று பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி 24 கரட் தங்கப் பவுண் விலை 141,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக உயர்ந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க ஆபரண தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே இதுவரை பதிவு செய்யப்பட்ட தங்கத்தின் அதிகபட்ச விலை இதுவாகும். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]
பேக்கரி பொருட்கள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

மாவு நிறுவனங்கள், ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை இன்று முதல் உயர்த்தியதன் காரணமாக, பாணின் விலை உட்பட அனைத்து பேக்கரி பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன கூறினார். மாவு வழங்கும் பிரதான நிறுவனங்கள் இன்று முதல் விலையை ரூ. கிலோவுக்கு 38 ரூபாவால் அதிகரித்துள்ளன. இதனால் பேக்கரி பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கப்படும். எனவே, […]
சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்

மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ள தாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹோட்டல்களில் மின்வெட்டு ஏற்பட்டால் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பயணங் களுக்கு எரிபொருளை வழங்க முடியாமல் யால மற்றும் ஏனைய பூங்காக்களும் வேகம் குறைந்துள்ளன. மேலும், ஹோட்டல்களில் உணவு தயாரித்த லுக்கும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நெருக்கடி […]