வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டம்!

வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது. ஆசியாவிலேயே முதலாவது சர்வஜன வாக்குரிமையை நடைமுறைப்படுத்தியதன் மூலம், உலகளாவிய ஜனநாயக வரலாற்றில் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதென, குறித்த நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது, மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஆனால் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் […]

எரிபொருள் விலை மீனவர் எதிர்கொண்டுள்ள பிரச்சினை

எரிபொருள் விலை அதிகரிப்பினால், மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக, அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம், எரிபொருளில் தங்கியுள்ளது. இந்தநிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பானது, நாட்டில் உள்ள மீனவர்களின் தொழிலை இல்லாது செய்வதற்கு சமமான செயலாகும் என அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து […]

இன்று முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலை

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 176 ரூபாவாகும். ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் […]

இலங்கை மின் கட்டணம் அதிகரிப்பு!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A B C D […]

கையடக்க தொலைபேசிகளின் விலை 30% அதிகரிப்பு

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசி மற்றும் அவை சார்ந்த உபகரணங்களின் (accessories) விலை 30 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போது விற்பனையாளர்கள் வசமுள்ள உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார். 30 வீத விலை அதிகரிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க […]

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை

கடன் மீள் கட்டமைப்பு, அந்நிய செலாவணி உள்ளிட்ட விடய பரப்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராகி வருகிறது. இதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்கானதல்ல – அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடனான இலங்கை அதிகாரிகளின் சந்திப்புகள் சில ஊடக நிறுவனங்களால் கூறப்பட்டுள்ளபடி கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக […]

இலங்கை பெற்றோலியம் விலையை அதிகரித்தது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 176 ரூபாவாகும். ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 76 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. […]