வாகனங்களை இறக்குமதி மத்திய வங்கி பரிந்துரை

டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால், குறிப்பிட்ட சில நபர்களின் விரைவான டொலர் வரவால் நாட்டில் டொலர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இலங்கை மத்திய வங்கி கூறுகிறது. இதன்மூலம் வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு வாகனங்களின் […]

பதப்படுத்திய உணவு வகைகள். அவதானமாக இருக்கவும்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டு காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவின் தரம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. துர்நாற்றம், நிறம் அல்லது வித்தியாசமான வடிவத்தில் இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப் பட்ட உணவுகளை விற்பனை செய்வதையோ அல்லது கொள்வனவு செய்வதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில், மனித நுகர்வுக்குத் […]

இறப்பர் தயாரிப்பு தொழிற்சாலை ஒப்பந்தம்!

ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு அவிசாவளை, கெட்டஹெத்த பிரதேசத்தில் இறப்பர் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபைக்கும், நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் அண்மையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 5.85 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]

திறைசேரி ஏல விற்பனை மத்திய வங்கியின் அறிவிப்பு!

60,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை மூலம், எதிர்வரும் 15ஆம் திகதி வழங்கப்படவுள்ளன. மத்திய வங்கி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி, 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 362 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட உண்டியல்கள் ஏலத்தில் வழங்கப்படவுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி […]

மத்திய வங்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

‘ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்’ தொடர்பில் சில விதிகளை அறிமுகப்படுத்தி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 16 விதிகள் அடங்கிய இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஏற்றுமதியாளரும், இலங்கைக்கு வெளியில் ஏற்றுமதி செய்யப்படும் எல்லாப் பொருட்கள் அல்லது வழங்கப்படும் பணிகள் தொடர்பில், கப்பலேற்றும் அல்லது பணிகளை வழங்கும் திகதியிலிருந்து 180 நாட்களினுள் ஏற்றுமதிப் பெறுகைகளை கட்டாயமாக இலங்கையில் பெறுதல் […]

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை

கடன் மீள் கட்டமைப்பு, அந்நிய செலாவணி உள்ளிட்ட விடயப் பரப்பில், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், எதிர்வரும் சில நாட்களில் இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல், கடன் கோருவதற்கானதல்ல என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடனை அடைக்க […]

இலங்கை பேருந்து கட்டணம் அதிகரிப்பு

இலங்கை கனியவள கூட்டுத்தாபனமும், எரிபொருட்களின் விலையை அதிகரித்ததை அடுத்து, பேருந்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் மானியம் கிடைக்காவிட்டால், பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார். நிவாரணம் வழங்கப்படாவிட்டால், கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, டீசல் மானியம் கிடைக்காவிட்டால், தமது சங்கத்தினால், பேருந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் […]