கொண்டுவரப்படும் மரக்கறி தொகையில் வீழ்ச்சி.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக அதன் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. பொதுவாக நாளாந்தம் 30 இலட்சம் கிலோ மரக்கறி சமீப காலத்தில் கிடைத்து வந்தது. இருப்பினும், தற்போது சுமார் 2 இலட்சம் மரக்கறி வகைகளே கிடைத்து வருவதாக சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றைக் கொள்வனவு செய்வதற்கு வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 70 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. சமீபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் தொகையில் மரக்கறி வகைகள் கிடைத்து வந்தன. இருப்பினும் நேற்று காலை […]
5ஆம் தர மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம்

2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பேறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பரீட்சை பெறுபேற்றை அறிய முடியும். 2021ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது. குறித்த பரீட்சையில், தமிழ் மொழிமூலம் 85,446 மாணவர்களும், சிங்கள மொழிமூலம் 255,062 மாணவர்களும் என மொத்தமாக 340, 508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். […]
நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணத்தை 2 அல்லது 3 ரூபாவினால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை இன்றைய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில், தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றம் காரணமாக, பேருந்து பயண கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் […]
தங்கத்தின் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் 1988.18 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 0.52வீதத்தினால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே […]
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எதிர்வரும் 6 வருடங்களுக்குள் 5,000 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் சேர்க்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் .ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதானி இந்தியா நிறுவனம் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க […]
சீமெந்து விலை அதிகரித்தது!

இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்றின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்று 1,850 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே […]
கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் உயர்வு!

கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 60சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. துறைமுக சேவை ஒன்றிணைந்த சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். இன்று இந்த விடயம் தொடர்பில் பல துறைமுக சேவை சங்கங்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடியிருந்தன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் கொள்கலன் உள்ளிட்ட சகல […]