மதுபானங்களின் விலையும் அதிகரித்தது!

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 750 மில்லிலீற்றர் அதிவிஷேசம் மதுபான போத்தலின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக DCSL நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறே, அதிவிஷேசம் வகை மதுபானம் 375 மில்லிலீற்றரின் (அரை) விலை 60 ரூபாவினாலும், 180 மில்லிலீற்றரின் (கால்) விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான பியர்களின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான நிறுவனங்கள் […]
யுக்ரைனுக்கான ஏற்றுமதி முற்றாக இடைநிறுத்தம்!

யுக்ரைனுக்கான தேயிலை ஏற்றுமதி முழுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலப்பகுதியில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி வருமானம் மேலும் குறைவடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரஷ்ய நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாலும், கப்பல் நிறுவனங்கள் அந்த நாட்டுக்கான கொள்கலன் பறிமாற்றத்தை புறக்கணித்து வருவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இலங்கை, அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மூன்றாவது […]
நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடுவிழா

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் மொத்த விலை 2 ரூபாவாகவும் 5 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 9 ரூபாவாகவும் 10 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 17 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த லஞ்ச் சீற்றின் விலை 2.50 […]
IMF உடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அனுமதி

இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னதாக நிதியமைச்சர் நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் […]
லிட்ரோவிடமிருந்து எரிவாயு குறித்த புதிய செய்தி

தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு எரிவாயுக் கப்பல்களில் ஒன்றிலிருந்து சிலிண்டர்களை இறக்குவதற்கு இன்றிரவு தேவையான பெரும்பாலான டொலர்களைப் பெற எதிர்பார்ப்பதாக லிட்ரோவின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கப்பலுக்கு பணத்தைச் செலுத்தி இன்று இரவே எரிவாயுவை இறக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இருப்பினும், கேஸ் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின் றனர். நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பல்களுக் கான கட்டணச் சிக்கல்கள் காரணமாக போதிய ளவு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு […]
ஒரு டொலர் 275 இலங்கை ரூபா

ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை நாட்டில் அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் சிலவற்றில் இன்று (15) 275 ரூபாவாக விற்பனையாகின்றன. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு மிதக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், டொலரின் பெறுமதி தினமும் ஏற்ற இறக்கமாக உள்ளது. அதன்படி இன்று பல வர்த்தக வங்கிகள் ஒரு டொலரின் விற்பனை விலையை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளன. * சம்பத் வங்கி மற்றும் என்டிபி வங்கி – ரூ. 275.00 * இலங்கை வங்கி – ரூ. 270.00 […]
இலங்கை வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 259 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 4 சதம். விற்பனை பெறுமதி 340 ரூபா 20 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 276 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 286 ரூபா 84 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]