புலம்பெயர் நாட்டில் இரண்டு பிள்ளைகளுடன் காருக்கு தீயிட்டு தற்கொலை செய்த தமிழ் பெண்

அவஸ்திரேலியாவில் தமிழ் தாய் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் காருக்கு தீ வைத்து உயிரிழந்துள்ளார். திங்கள்கிழமை காலை 11.45 மணியளவில் பெர்த்தின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஜான் கிரஹாம் ரிசர்வ் பகுதிக்கு ஹோண்டா ஜாஸ் கார் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். தமிழக பின்னணியுடைய குடும்பமே உயிரிழந்தது. தாய் செவிலியராகப் பணிபுரிந்தார். கடந்த ஐந்து வருடங்களாக குடும்பம் பெர்த்தில் வசித்தது. குழந்தைகளின் தந்தை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றதாகவும், கத்தாரில் […]

பைடன், ஹிலாரி உட்பட 12 பேருக்கு தடை ரஸ்யா

அமெரிக்க ஜனாதிபதி உட்பட 12 அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக ரஸ்யா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் வெள்ளை மாளிகை பேச்சாளர் உட்பட 12 பேருக்கு எதிராக தடைகளை விதித்;துள்ளதாக ரஸ்யாஅறிவித்துள்ளது. ரஸ்யா வெளியிட்டுள்ள பட்டியலில் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனின் பெயரும் ஜனாதிபதி ஜோ பைடனின் மகனின் பெயரும் இடம்பெற்றுள்ளதை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த தடை அவசியமான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை பாதிக்காது என ரஷ்யா தெரிவித்துள்ளது. […]

மத்திய வங்கி பதவியிலிருந்து நீக்கப்படுகின்றார்

இலங்கையின் பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விரைவில் அஜித்கப்ரால் மாற்றப்படுவார் நாணயசபையும் முற்றாக மாற்றப்டும் என தெரிவித்துள்ளனர். ஆளுநர் கடந்த சில நாட்களாக தனக்கும் நிதியமைச்சருக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுவதை தயக்கத்துடன் நிராகரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆசிய கிளியரி;ங் யூனியனின்பணம் செலுத்துபவர்களின் ஒத்திவைப்பின் மூலம் இலங்கை வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள […]

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பினால் – 5 கிலோ அரிசி இலவசம்

சுவிஸிலிருந்து இலங்கை ரூபாவுக்குத் தவறான பணமாற்றுப் பெறுமதி வழங்கப்படுவதாக , சுவிட்சர்லாந்தில் உள்ள நிதிநிபுணர்கள் தெரித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சுவிஸ் பிராங்குக்கு 271 இலங்கை ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான ரூபாய்களை சுவிட்சர்லாந்தில் அரச அனுமதியுடன் இயங்கும் பணமாற்று நிறுவனங்கள் பதிவு செய்தது. இந்த நிலையில் 10 ஆம் திகதி இலங்கை அரசு ஒரு அமெரிக்க டாலருக்கு 58 ரூபாய்களை அதிகரித்ததையடுத்து இலங்கை ரூபாயின் பணப்பெறுமதி குறைக்கப்பட்டது. இதற்கமைவாக […]

எரிபொருள் போக்குவரத்திலிருந்து விலகுவதாக உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

இன்று (15) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெட்ரோலிய போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் ஒன்றை குறித்த சங்கத்தினர் அனுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், டீசல் விலை அதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின்போது […]

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 259 ரூபா 76 சதம் விற்பனை பெறுமதி 269 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபா 32சதம். விற்பனை பெறுமதி 352 ரூபா 66 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 09 சதம் விற்பனை பெறுமதி 298 ரூபா 79 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் […]

நிதியமைச்சர் இந்தியா பயணமானார்!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார். நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார். இந்தியாவுடனான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நோக்கில் அவர் இந்தியா சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் மூலம் இலங்கைக்கு அரிசி, கோதுமை மா மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியமென எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார […]