ஷரத் பூர்ணிமா வழிபாடு!

ஆயுத பூஜை, விஜயதசமி முடிந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத பௌர்ணமி திதியை தான் ஷரத் பூர்ணிமா என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் இந்த வழிபாடு நம்முடைய நாட்டில் கிடையாது. எனினும் இந்தியாவின் வடமாநிலத்தவர்கள் இந்த நாளை மிகவும் விசேடமாக கொண்டாடுகிறார்கள். ஈசனுக்காக சிவராத்திரி அன்று கண் விழித்து வழிபாடு செய்கின்றோம். அதேபோல மகாலட்சுமியின் அருளாசியை பெற வேண்டும் என்பதற்காக கண்விழித்து வழிபாடு செய்யக்கூடிய ராத்திரிதான் இந்த ஷரத் பூர்ணிமா வழிபாடு. பௌர்ணமியை தான் பூர்ணிமா என்று சொல்கிறார்கள். […]
புண்ணிய பலன்களை தரும் புரட்டாசி.

புரட்டாசி மாத பெளர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது புரட்டாசி மாத பெளர்ணமி ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பெளர்ணமி வரும் மாதங்கள் மற்றும் கிழமைகளின் அடிப்படையில் அதன் சிறப்புகள் மட்டுமின்றி, வழிபாட்டு பலன்களும் மாறுபடும். அதிலும் இந்த ஆண்டு புரட்டாசி மாதப்பிறப்பு நாளுடன் பெளர்ணமி இணைந்து வந்திருப்பது கூடுதல் சிறப்புக்குரியதாகும்.புரட்டாசி மாத […]
எங்களை உண்ணாதீர்கள்! உங்களுக்கு நன்மை!..

தற்போது பன்றிகளுக்கிடையே பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக, இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல், பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய சூழ்நிலை காரணமாக இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளிலும் பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படும் இடங்களிலும் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார […]
ஐஸ்வர்யங்களை தரும் ஐப்பசி மாதம்!

தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமாக வருவது ஐப்பசி மாதமாகும். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக் கூடியது என்றால், ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களையும், மங்களங்களையும் அள்ளிக் கொடுக்கும் மாதமாகும். சூரியன், துலாம் ராசிக்குள் பயணிக்க துவங்கும் மாதமாகும், புரட்டாசி மாதத்தில் நடத்தாமல் இருந்த திருமணங்கள் நடக்கும் மாதம் ஐப்பசி மாதமாகும். அதே சமயம் இது முக்தியை பெறுவதற்கான மாதங்களின் ஆரம்ப மாதம் என்றும் சொல்லப்படுகிறது. ஐப்பசி மாதம் முருக வழிபாட்டிற்கும், சிவ வழிபாட்டவிற்கும் மிகவும் ஏற்ற […]
வன்னி அரசியலுக்கு இன்னுமொரு கை
Lyca Mobile நிறுவனத்தின் உரிமையாளர் அலிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் இலங்கை அரசியலுக்குள் மைக் சின்னத்தில் ரஞ்சன்ராமநாயக்காவை கட்சித்தலைவராகவும் National Coordinator ஆக திலகரட்ணம் டில்சாந் ஆடங்கிய கட்சியை சிங்கள பிரதேசத்திலும் அதே போல் வன்னிப்பிரதேசத்தில் கங்காறு சின்னத்தில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என 9 பெயர் கொண்ட அணிமூலம் பாராளுமன்ற தேர்தலில் வென்று அரசாங்கத்திற்கு உதவி புரிவதற்காக இலங்கையில் வளர்ந்த தமிழர் சுபாஸ்கரன் அவர்கள் ஆரம்பித்துள்ளார் இதற்கு எதிராக சிங்கள மற்றும் முஸ்லீம் […]
சகல தோஷமும் நீக்கும் செவ்வாய் பிரதோஷ வழிபாடு!

புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷமானது இன்று செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வந்துள்ளது. செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் சகல தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கபடுகிறது. உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த […]
மஹிந்த ராஜபக்க்ஷவின் வாகனங்கள் பறிப்பு!

மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் கூறுகையில், மஹிந்த ராஜபக்க்ஷவின் மெய்ப்பாதுகாவலர்கள் பயன்படுத்திய சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தமக்கு தெரிய வந்துள்ளது . இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி […]