இலங்கையில் அரிசி 200, வெங்காயம் 250, முட்டை 35 ரூபாய் – 90% உணவகங்கள் மூடல்

இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நாளாந்தம் வீதிகளிலும், வர்த்தக நிலையங்களிலும், வரிசைகளில் காத்திருப்பதை காண […]

இறக்குமதியாகும் பழங்கள் விசேட பண்ட வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் தயிர், ஆப்பிள், திராட்சை, பாலாடைக்கட்டி (சீஸ்) ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திராட்சை, அப்பிள், கிலோவொன்றுக்கான பண்ட வரி 300 ரூபாவாகவும், தோடம்பழம், பேரீச்சம்பழம் கிலோவொன்றுக்கான வரி 200 ரூபாவாகவும் விதிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன், ஏனைய மதத் தலைவர்களே, தாய்மார்களே, தந்தையர்களே, சகோதர சகோதரிகளே, அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல […]

பெசில், இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார்

இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இன்று மாலை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் ட்விட் செய்துள்ளார். அதில் அவர், எமது பொருளாதார கூட்டாண்மை குறித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கை மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிவருகிறது என தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று இந்தியாவுக்கு பயணமான நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இன்றைய தினம், […]

ஜப்பானில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்

தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.3 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் 60 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானில் பல பகுதிகளிலுள்ள கட்டடங்கள் குலுங்கியதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. […]

அறுபது மருந்து வகைகளின் விலைகளில் திருத்தம்

60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதி விசேட வர்த்தமானி 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், கடந்த மாதம் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்ததென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இந்த மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், உற்பத்தி, கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை என்பன வீழ்ச்சியடைந்த அதேவேளை, வழங்குநர் விநியோக நேரம், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் நீட்சியடைந்தது. பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது, பெப்ரவரி மாதம் 51.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பணிகள் துறை முழுவதும் சிறிதளவான வளர்ச்சியொன்றினை […]