டொலர் இல்லாததால் காத்திருக்கும் கப்பல்

டீசல் மற்றும் விமான எரிபொருளை ஏற்றி வந்த கப்பல் ஒன்று அவற்றை விடுவிக்க முடியாமல் நான்கு நாட்களாக இலங்கை கடற்பரப்பில் தரித்து நிற்கிறது. இரண்டு எரிபொருட்களும் 20,000 மெட்ரிக் தொன் கொண்டதாக கப்பலில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எண்ணெய் பங்குகளை வெளியிடுவதற்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் டொலரைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அவர் கூறினார். கப்பல் நிறுத்தம் காரணமாக ஒரு நாளைக்கு 19,000 டொலர் தாமதக் கட்டணமாக செலுத்த […]
சுற்றுலாத்துறையை பாதித்த எரிபொருள் நெருக்கடி

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் ஹோட்டல் வசதிகள் தொடர்பில் சிக்கல் நிலவுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எரிபொருள், எரிவாயு மற்றும் மின்விநியோகத்தில் சுற்றுலாத்துறைக்கு முன்னுரிமையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் […]
பலசரக்கு ஏற்றுமதி மூலம் ஆக கூடிய வருமானம்

பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் சமீப காலத்தில் பெறப்பட்ட ஆக கூடிய வருமானத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டுள்ளது. இதற்கு அமைவாக 2021 ஆம் ஆண்டியில் மாத்திரம் பெறப்பட்ட வருமானம் ஒரு இலட்சத்து மூவாயிரம் மில்லியன் ரூபாய்களாகும். இதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 41 வீத அதிகரிப்பாகும். இதில் ஆக கூடிய வருமானம் கறுவா மூலம் பெறப்பட்டுள்ளது. 18இ814 மெட்றிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பெறப்பட்ட வருமானம் 45இ879 மில்லியன் ரூபா ஆகும். கடந்த […]
பொலித்தீன் விலைகளும் அதிகரித்தன!

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இதன் காரணமாக பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரிசியை பொதியிடப் பயன்படுத்தும் பை ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரிசி பை உற்பத்தியார்கள் முன்னர் அறிவித்தனர். […]
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் 10 நாட்களில் நாட்டுக்கு!

25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 114,000 மெட்ரிக் டன் டீசலும், 60, 000 மெட்ரிக் டன் பெட்ரோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, 40,000 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதியில் நாட்டை வந்தடையவுள்ளது. மேலதிக டீசல் ஏப்ரல் மாதம் முதல் வார காலப்பகுதியில் […]
நாளை முதல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும்

எரிவாயுவை தாங்கிவந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் இன்று மாலை செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நாளை (17) முதல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் இன்று பிற்பகல் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாக தெரியவருகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து […]