400 கிராம் பைக்கட் ஒன்றின் புதிய விலை 790

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி பால்மா 400 கிராம் பைக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதி பால்மா 400 கிராம் பைக்கட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாக அதிகரித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

தேயிலை உற்பத்தியானது, 13 ஆண்டுகளின் பின்னர் வீழ்ச்சிப்போக்கில் பதிவாகியுள்ளது கடந்த பெப்ரவரி மாதம் நாட்டின் தேயிலை உற்பத்தி, 18.16 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது 20 சதவீத வீழ்ச்சியாகும் என தேயிலை சபையின் தரவுகளின் மூலம் அறியக்கூயதாக உள்ளது. 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12.8 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் மாதமொன்றில் பதிவான ஆகக்குறைந்த தேயிலை உற்பத்தி இதுவாகும் என தேயிலை தரகு நிறுவனம் […]

இலங்கையில் தூசு செறிவு அதிகரித்துள்ளது

தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து பாகங்களின் வளிமண்டலத்தில், தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் காலநிலையும், ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வளிமாசடைவும் இதற்குக் காரணமாகும் என தேசிய கட்டட ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் பிரிவு பணிப்பாளர் சரத் ப்ரேமசிறி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகளில், மாசடைந்துள்ள வளியில் உள்ள தூசு துகள்கள், காற்றோட்டத்தின் மூலம், இலங்கையின் வளிமண்டல […]

2, 000 கொள்கலன் இறக்குமதிக்கு முன்னுரிமை

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2, 000 கொள்கலன்களை விடுவிப்பதற்கான கட்டணத்தை வழங்க, நிதியமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு என்பன இணங்கியுள்ளாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அரிசி. சீனி, பெரிய வெங்காயம், மிளகாய், கடலை மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவியின் கீழ் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது. இதேவேளை, […]

சீனாவின் உதவியை நாடியுள்ளது இலங்கை

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும். நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும் வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இலங்கையின் […]

மூடப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றது லிட்ரோ காஸ்

லிட்ரோ காஸ் நிறுவனம் முற்றாக மூடப்படும் நிலையை தவிர்ப்பதற்கு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை (12.5) 2000 ரூபாவினால் அதிகரிக்கவேண்டிய நிலை காணப்படுவதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிட்ரோ நிறுவனத்தை பாதுகாப்பதற்கான சங்கத்தைச் சேர்ந்த தொழில்சார் வல்லுனர்கள் என தங்களைக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் சிலர் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளனர். 2021 இல் இலங்கை நுகர்வோர் அதிகார சபை எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை ( எல்.பீ) அதிகரிக்க மறுத்ததால் நிறுவனத்திற்கு 11 பில்லியன் ரூபா […]

கடதாசி இல்லை, தவணைப் பரீட்சைகள் நிறுத்தப்படும்

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகள் கடுமையான தாள் தட்டுப்பாடு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. வினாத்தாள் அச்சிடுவதற்குத் தேவையான தாள்கள் இல்லாத காரணத்தினால் தரம் 9, 10, 11 ஆம் ஆண்டுக்கான தவணைப் பரீட்சைகளை பிற்போடுமாறும், சாத்தியமாயின் பாடசாலை மட்டத்தில் ஆரம்பக் கட்ட தவணைப் பரீட்சை களை நடத்துமாறும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பாடசாலைகளுக்கு அறிவித் துள்ளார். ஒவ்வொரு அதிபருக்கும் குறிப்பிட்ட தரங்களுக் கான பரீட்சை வினாத்தாள்கள் அடங்கிய குறுந்தகடு(இறுவட்டு) வழங்கப்பட்டுள்ள போதிலும் தாள் தட்டுப்பாடு, அச்சிடும் […]