பால்மா இறக்குமதியில் சிக்கல்!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பால்மா இறக்குமதி குறைவடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். 400 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை தற்போது 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மாவின் புதிய விலை 790 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 600 ரூபாவால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு […]
லாஃப் எரிவாயு விலைகள் அதிகரிப்பு!

லாஃப் கேஸ் நிறுவனம் எரிவாயு கொள்கலன்களின் விலையை அதிகரித்துள்ளதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 4,199 ரூபாவாகவும், 5 கிலோகிராம் கொள்கலனின் விலை 1,680 ரூபாவாகவும், 2 கிலோகிராம் கொள்கலனின் விலை 672 ரூபாவாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம், லிட்ரோ எரிவாயு விற்பனையின் ஊடாக நட்டம் ஏற்படுவதாக தெரிவித்தது. இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 4,600 […]
லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் மாலைத்தீவில் இருந்து நாட்டை வந்தடையவுள்ளது. அதில் 3,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 17ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் அதனை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் இதுவரையில் 1,000 மெற்றிக் டன் எரிவாயு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று முன்தினம் […]
பால் தேநீரின் விலை 100 ரூபா

பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பால் தேநீரின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 100 ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். பால்மா விலை அதிகரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாகவே விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது. விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் ஒரு தேநீருக்கு 3 கரண்டி பால்மா வரை பயன்படுத்துமாறு உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல […]
மார்ச் மாதத்தில் 172.34 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது

பரீட்சை வினாப்பத்திரங்கள், மின் பட்டியல்கள் உள்ளிட்டவைகளை அச்சிடுவதற்கு காகிதம் இல்லை என கூறும் நிலையில், பணம் அச்சிடப்பட்டமை தொடர்பில் பொருளியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பணம் அச்சிட இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானம் பொருட்களின் விலை உயர்விற்கான காரணம் என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரூபாவை நெகிழ்வுப் போக்கில் விட தீர்மானித்ததன் பின்னர், மத்திய வங்கி 170 பில்லியனுக்கும் அதிக பணத்தை அச்சிட்டுள்ளது. மத்திய வங்கி 55.95 பில்லியன் ரூபாவை நேற்று (18) அச்சிட்டுள்ளதுடன், இந்த […]
உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.9% வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கிணங்க தங்கம் ஒரு அவுன்ஸின் விலை தற்போது 1919.36 அமெரிக்க டொலராக அமைந்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் […]
இறக்குமதி செய்யப்பட்ட தொடருந்து பெட்டிகளில் பாரிய தொழில்நுட்பக் கோளாறு

அண்மையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடருந்து பெட்டிகள், சேவையில் ஈடுபடுத்துவதற்கு தகுதியற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில். அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த தொடருந்து பெட்டிகளில் பாரிய தொழில்நுட்பக் கோளாறு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அதிகரித்துவரும் செலவீனங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால், எதிர்வரும் ஜுலை மாத வருடாந்த பேருந்துக் கட்டண சீரமைப்பின்போது, கட்டணத்தை மீளவும் அதிகரிக்க […]