டொலரின் விற்பனை பெறுமதி மேலும் உயர்வு!

சில அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று மேலும் அதிகரித்து காணப்படுகிறது. அதற்கமைய குறித்த வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 280 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற […]

காங்கேசன்துறை சீமெந்து பிரதமர் பார்வையிட்டார்

யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) காலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான யுத்தம் காரணமாக மூடப்பட்டது. இத்தொழிற்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும், தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. 2021 பெப்ரவரி 08 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய […]

வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்த துருக்கி உறுதி

இலங்கையுடனான இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்த இலங்கையில் உள்ள துருக்கி தூதுவர் ஆர்.டிமெற் செக்கசியோக்ளு உறுதியளித்துள்ளார். இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரு தரப்பு கலந்துரையாடலில், துருக்கி தலைநகர் அங்காரவில் இருந்து தொலைக்காணொளி மூலம் உரையாற்றியிருந்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற போதே துருக்கி தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இரு தரப்பு வர்த்தக உறவுடன் நேரடி முதலீட்டு நடவடிக்கைகளிலும் எதிர்வரும் வருடங்களில், துருக்கி இணைந்து கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் […]

நாடளாவிய ரீதியில் வீட்டுத் தோட்டச் செய்கை

நாடளாவிய ரீதியில் 2,200,000 வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ‘பசுமையான நாடு’ என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் 12,912 சமூர்த்தி கொடுப்பனவு பெறும் குடும்பத்தவர்கள் பயனடையவுள்ளனர். அவர்களுக்கு, இலவச பழ மற்றும் மரக்கறி விதைகள் விநியோகிக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி […]

இலங்கை முகக்கவசங்களுக்கான விலை அதிகரிப்பு!

சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது. சகல விதமான முகக்கவசங்களையும் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் டொலர் பற்றாக்குறை தாக்கம் செலுத்துகிறது. இந்தநிலையில் நாளை முதல் முகக்கவசங்களின் விலையை 30 சதவீதத்தினால் […]

போன வாரம் 500 ரூபாய்க்கு விற்ற பொருட்கள் இந்த வாரம் 1000 ரூபாய்

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை லாஃப் நிறுவனம் 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,680 ரூபாவாக நிர்ணயித்துள்ளதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் […]

யாழ் பொருளாதார மத்தியநிலையம் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டுவில் நகருக்கு வருகை தந்த கௌரவ பிரதமருக்கு அப்பகுதி மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், யாழ் […]