மின், தண்ணீர் கட்டணம் உயர்வு: முடிவு இல்லை!

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்ல. எனினும், ரயில் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது” […]
எச்சரிக்கை இலங்கையில் அதிக போலி நாணயத்தாள்கள்

தங்கல்லை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்ததெமலிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை விசாரணைக்குட்படுத்தியதில் போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் 11 மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு […]
இரண்டரை பில்லியன் டொலர், இலங்கை சீனா பேச்சு

பல தசாப்தகாலங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருடிக்கடிக்கு தீர்வை காண இலங்கைக்கு உதவுவதற்காக 1.5மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது விரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் தெரிவித்துள்ளார். இதுதவிர இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவி குறித்தும் ஆராயப்படுவதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். மார்ச் 18 ம் திகதி சீனாவின் அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு […]
டொலர் தட்டுப்பாடு 3 தூதரகங்கள் மூடப்படுகின்றன

டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடு களிலுள்ள இரண்டு இலங்கைத் தூதரகங் களையும், ஒரு துணைத் தூதரகத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் பாக்தாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணைத் தூதரகம் ஆகியன இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளன. இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக வெளி விவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த நாடுகளிலுள்ள அந்தத் தூதரகங்களுக்கான தூதரகப் பணிகள் அருகிலுள்ள […]
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 127வது

உலகிலேயே மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டு இடங்களை முந்தியுள்ளது. அதன்படி, இலங்கை தற்போது உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 127வது இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின், உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் அறிக்கையின்படி, இலங்கை 129 வது இடத்தில் காணப்பட்டது. இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் (2022) இலங்கை முன்னேற்றங்கண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் அறிக்கையின்படி, முதலாவது இடத்தை பின்லாந்தும், […]
ஆறு லட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை

எதிர்வரும் சிறுபோகத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் ஆறு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பசுமை விவசாயக் கொள்கையின் அடிப்படையில், இரசாயன உரத்திற்கு பதிலாக சேதனப் பசளையின் விநியோகம் இடம்பெறும் என்றும், விதைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் விவசாயிகளுக்குத் தேவையான உரம் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் […]
5,000 கறவை இறக்குமதி செய்ய திட்டம்

அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை கால்நடைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவிததுள்ளார். அத்துடன், பசும்பால் உற்பத்தியை மற்றும் பாவனையை அதிகரிக்கும் நோக்கில், பாரிய அளவிலான பால் பண்ணைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அமச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் […]