இலங்கை – நெதர்லாந்துக்கு இடையிலான விமான சேவைகள்

இலங்கைக்கும், நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும், நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. அதனால், விமான சேவை நடவடிக்கைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் குறித்த விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த […]
இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

ரூபாவின் பெறுமதியை மிதப்பில் விட மேற்கொண்ட தீர்மானத்தை அடுத்து, பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை, 285 ரூபா முதல் 290 ரூபா வரையில் உயர்த்தியுள்ளன. இதேநேரம், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 284 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 […]
சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைகுறித்து கலந்துரையாடுவதற்காக இந்த சர்வகட்சி மாநாட்டு நடத்தப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் பங்கேற்றுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் […]
ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை

நேற்று முன்தினம் இரவு நாட்டை வந்தடைந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை கப்பலில் இருந்து தரையிறக்கி விநியோகிக்கும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய தினம் சுமார் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாளையும், நாளை மறுதினமும், மேலும் 7,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. எவ்வாறிருப்பினும், நாட்டின் பல பாகங்களிலும், நேற்றைய தினமும், சமையல் […]
பாசிக்குடா சுற்றுலா வலய திட்டம்!

எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் தயாரிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலா வலயத்தில் முதலீட்டாளர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட காணிகளில் விருந்தகங்களை நிர்மாணிக்க தவறியவர்களிடமிருந்து காணியை மீளபெற்று புதிய முதலீட்டாளர்களிடம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே அழகிய கடற்கரையை கொண்டுள்ள இடங்களில் பாசிக்குடாவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. 156 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள பாசிக்குடா வலயத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் 12 புதிய நட்சத்திர அந்தஸ்தை கொண்டுள்ள விருந்தகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த […]
சர்வதேச சட்ட உதவியை நாடும் இலங்கை

கடன் மறுசீரமைப்பு தொடர்பான தொழில்நுட்ப உதவிகளுக்காக சர்வதேச சட்ட நிபுணர்களின் குழுவை அமர்த்த இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர், இலங்கை இந்த நடவடிக்கைகு செல்ல எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற […]
மின் உற்பத்தி மேலும் பாதிப்படையும் அபாயம்!

இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் நாட்டின் நீர்மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் பேண வேண்டிய குறைந்தபட்ச நீர்மட்டத்தை விடவும் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காசல்ரீ, மவுஸ்ஸாகல, சமனல வெவ, கொத்மலை, விக்டோரியா மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் […]