யாழில் நுகர்வோர் அதிகார சபையின் திடீர் பரிசோதனை

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை மாசி மற்றும் பங்குனி மாதங்களில் திடீர் மேற்கொண்ட பரிசோதனையில் நேற்று வரைக்கும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்தார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிவித்தலிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிவிப்பில்,நிபந்தனை அடிப்படையில் பால்மா பொருட்கள் விற்பனை செய்தல், விற்பனை செய்ய மறுத்தல், விலையினை மாற்றி விற்பனை செய்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலையினை வெளிக்காட்டாமை, மற்றும் பொதி […]
வணிக வங்கிகளில் டொலரின் விற்பனை பெறுமதி உயர்வு!

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று மேலும் அதிகரித்து காணப்படுகிறது. அதற்கமைய குறித்த வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 285 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற […]
IMF ஐ நாடும் இலங்கை, அமெரிக்கா வரவேற்பு

மாகாண சபைத் தேர்தலை நடத்தவும், ஜனநாயக இடைவெளியை விரிவாக்கம் செய்யவும் இலங்கையை ஊக்குவிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தை நாடும் இலங்கையின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜதந்திரி, இன்றைய தினம் நாட்டில் பல்வேறு சந்திப்புக்களை நடத்த உள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ […]
பெறுமதி சேர் வரிச் (VAT) சட்டத்தில் திருத்தங்கள்

பெறுமதி சேர் வரிச்சட்டத்தில் (VAT) திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்க நிதிப் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு, நேற்று கூடிய போது 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. பாதீட்டின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய […]
ஜனாதிபதி பிறப்பித்துள்ள விசேட உத்தரவு!

நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவு குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]
இலங்கையுடன் வலுவான பொருளாதார கட்டமைப்பு கட்டார் உறுதி!

இரு நாட்டு மக்களினதும் நலனுக்காக இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும், நட்புறவையும் மேம்படுத்துவதற்கு கட்டார் உறுதியளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸுக்கும், கட்டார் தூதுவர் அல் சொரூர் இற்கும் இடையிலான சந்திப்பு, நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது, கட்டார் தூதுவர் குறித்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார். இலங்கைக்கும், கட்டாருக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
இந்தியாவின் கடன் உதவி மே மாதம் வரை நீடிக்காது ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்களிற்கு மேல் நீடிக்கலாம் இந்தியாவின் கடன் உதவியிலிருந்து கிடைத்துள்ள நிவாரணம் மே மாதம் நடுப்பகுதி வரை நீடிக்காது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரை தேவைப்படும் நிதியை பெறுவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார். சர்வகட்சிமாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எங்களிற்கு ஒரேயொரு வழியே உள்ளது ,கூட்டமைப்பை உருவாக்க கூடிய புதிய நட்பு நாடுகளை அணுகி நிதிஉதவியை கோருவதே அது […]