எரிபொருள் தாங்கி ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன

எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் மேலதிகமாக உள்ளமையால், சில எரிபொருள் தாங்கி ஊர்திகள் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மற்றுமொரு கப்பலில் இருந்து, முத்துராஜவளையில் பெற்றோலை தரையிறக்கும் பணிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார். டீசல் கப்பலொன்று வந்துள்ள நிலையில், அந்த டீசலை கொலன்னாவையில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தியாவிலிருந்து மற்றுமொரு எரிபொருள் கப்பல் எதிர்வரும் முதலாம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது. இதேநேரம், […]
முட்டை உற்பத்தி 40% வீழ்ச்சி

முட்டை உற்பத்தி 40% வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது. சந்தைகளில் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் S. குணசேகர குறிப்பிட்டார். கோழி இறைச்சி 670 – 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன், சில வியாபாரிகள் 800 ரூபாவிற்கு கோழி இறைச்சியை விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]
தேங்காய் எண்ணெய்யின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை!

சித்திரை புத்தாண்டுக்கு முதல் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அரச தோட்ட நிறுவனங்களுக்குரிய தேங்காய்களை மக்களுக்கு குறைந்த விலையில் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. மக்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விலைகளை குறைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
வந்தடையவுள்ள மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல்!

இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இதன்மூலம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறைவடையும் என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், நேற்றிரவு நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]
தொடருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

மலையகம் மற்றும் வடக்கு நகரங்களுக்கு இடையிலான தொடருந்து மார்க்கங்களின் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய புதிய கட்டணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு புதிய கட்டணமாக முதலாம் வகுப்பிற்கு 1,000 ரூபாவும், 2ஆம் வகுப்பிற்கு 500 ரூபாவும், 3ஆம் வகுப்பிற்கு 300 ரூபாவுமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என […]
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 289 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபா 20 சதம். விற்பனை பெறுமதி 380 ரூபா 30 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம். ஜப்பானிய […]
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% – 50% அதிகரிப்பு!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர், தற்போதுள்ள டொலருக்கான கேள்வி குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க […]