IV அறிக்கை இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள்

பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது; அ) 2021 திசெம்பரில் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுதல், இவ்விஜயத்தின் போது நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதேபோன்று பல்வேறு அரசாங்க முகவராண்மைகள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் […]

நீர் மட்டம் வெகுவாக வீழ்ச்சி

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையையடுத்து காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நீரில் மூழ்கி இருந்த பல கட்டிடங்கள், ஆலயங்கள், முதலானவற்றை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நீர்த்தேக்கத்தில் நேற்று (25) 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக மின்சாரதுறை பொறியியலாளர் தெரிவித்துள்ளனர். மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 29.7 வீத நீர் மாத்திரம் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று கொத்மலை நீர்த்தேகத்தில் 21.5 வீத நீரும் விக்டோரியா நீர்த்தேகத்தில் 33.2 வீதமும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தில் 56.1 வீதமும் சமனலவெவவில் 14.6 வீத […]

சந்தையில் தங்கத்தின் விலை 3% வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1952.60 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னரான விலையுடன் ஒப்பிடுகையில், 3% வீழ்ச்சியாக இது பதிவாகியுள்ளது. இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, பிரித்தானிய Brent சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120.65 டொலராக அமைந்துள்ளது. அமெரிக்க சந்தையில் பீப்பாய் ஒன்றின் விலை 113 .90 டொலராக உள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]

12 நாட்களாக நங்கூரமிடப்பட்டிருந்த டீசல் கப்பலுக்கு 42 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டன!

கடந்த 12 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த டீசல் மற்றும் விமான எரிபொருள் தாங்கி வருகை தந்த கப்பலுக்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர் ஒல்கா தெரிவித்துள்ளார். இதன்படி, 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 20,000 மெட்ரிக் டன் விமான எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும், கப்பலுக்கான தாமதக் கட்டணம் இதுவரை கணக்கிடப்படவில்லை. மேலும், இந்திய கடனுதவியுடன் 35,000 மெட்ரிக் டன் பெட்ரோலை தாங்கிய மற்றுமொரு கப்பல் […]

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபா 95 சதம். விற்பனை பெறுமதி 391 ரூபா 25 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம். ஜப்பானிய […]

மேலும் ஒருதொகை டீசலை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்

இலங்கைக்கு மேலதிகமாக ஒருதொகை டீசலை வழங்குவதற்கு இந்தியா இணங்கி இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு அமைய இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் எல்லை வசதிக்கான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 7 மாதங்களுக்கு பெற்றோல், டீசல் மற்றும் விமான எண்ணெய் வழங்கப்படும். இதற்கு மேலதிமாக அவசர தேவைக்காக 40,000 மெட்ரிக் டன் டீசலை […]

உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!

உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்த கடன் உதவியை இலங்கை நாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே பல திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் அமெரிக்காவில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய […]